Published : 09 Jan 2014 12:00 AM
Last Updated : 09 Jan 2014 12:00 AM

தூத்துக்குடியில் இன்று முதல் 144 தடை

தூத்துக்குடி மாவட்டத்தில், வியாழக்கி ழமை (ஜன.9) முதல் 3 நாள்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆட்சியர் எம். ரவிக்குமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு நிறுவனர் மற்றும் தலைவர் மறைந்த சி.பசுபதிபாண்டியனின், 2-ம் ஆண்டு நினைவு நாள் அவரது சொந்த ஊரான தூத்துக்குடி வட்டம், அலங்காரத்தட்டில், வரும் 10-ம் தேதி வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்படுகிறது.

கடந்தாண்டில் நினைவு நாள் நிகழ்ச்சியின் போது, நிகழ்ந்த அசம்பாவித சம்பவங்களை கருத்தில் கொண்டு, சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும், பொதுமக்களின் அமைதியை உறுதி செய்யவும், 9-ம் தேதி காலை 8 மணி முதல், வரும் 11-ம் தேதி காலை 8 மணி வரை 144-ன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.

இந்நாட்களில் ஊர்வலங்கள் நடத்தவும், 5 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் கூடவும், தூத்துக்குடி மாவட்டம் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து அனைத்து வகை வாடகை வாகனங்கள் மூலமாகவும் நினைவு தினத்துக்கு கலந்து கொள்ள அழைத்து வரவும், குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 144-ன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.

இந்நாள்களில் வேறு ஏதேனும் கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் நடத்த இருந்தால், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரை அணுகி அனுமதி பெற்றுக்கொள்ளலாம். இந்த தடை உத்தரவு திருமணம் மற்றும் இறுதிச் சடங்கு ஊர்வலங்களுக்கு பொருந்தாது என்றார் ஆட்சியர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x