

பயிர்க் கடன் தள்ளுபடி உத்தரவை காலம் தாழ்த்தாமல் செயல்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் நேற்று அவர் கூறியதாவது:
பயிர்க் கடன்களை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் போராடி வரும் நிலையில், தமிழக முதல்வர் அதைக் கண்டுகொள் ளாமல் தேர்தல் வேலையில் ஈடுபட்டுள்ளார்.
விவசாயிகள் போராட்டத்தைத் தொடர்ந்து பயிர்க் கடனை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. விவசாயிகள் கடன் தள்ளுபடி உத்தரவை காலம் தாழ்த் தாமல் விரைந்து செயல்படுத்த வேண்டும்.
தேசிய வங்கிகளில் விவசாயி கள் பெற்றுள்ள பயிர்க் கடனையும் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளின் முக் கியக் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு அவற்றை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும்.
அதிமுகவில் ஓ.பன்னீர்செல் வம், சசிகலா அணியினர் எவ்வ ளவுதான் பிரச்சாரத்தில் ஈடுபட் டாலும், இரு அணியினருமே டெபாசிட் இழப்பார்கள் என்றார். ‘மைல் கற்களில் மையைப் பூசாமல் முகத்தில் பூசிக்கொள்ளுங்கள்’ என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்ததாக வெளியான கருத்து குறித்த கேள்விக்கு, ‘இந்தி திணிப்பை திமுக எப்போதுமே எதிர்க்கும்.
தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஒருவரே இவ்வாறு பேசியிருப்பது வெட்கப்பட வேண் டும்’ என்றார்.