

வாக்காளர்களுக்கு ரூ.4 ஆயிரம் கொடுத்தவர்கள், ஏழை மக்களுக்கு இலவச பட்டா கொடுக்க முடியுமா? என்று தேமுதிக தலைவர் விஜய காந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.
நேற்று மாலை 6.55 மணிக்கு, ஆர்.கே. நகர் தொகுதி கொருக்குப்பேட்டை அம்பேத்கர் நகருக்கு, தனது பிரத்தியேக பிரச்சார வாகனத்தில் விஜயகாந்த் வந்தார். அங்கு காத்திருந்த வேட்பாளர் மதிவாணன், வாக னத்தில் ஏறி, திறந்த பகுதியில் நின்று கும்பிட்டவாறு நின்றார்.
வாகனத்தில் முன் பகுதி யில் அமர்ந்திருந்த விஜயகாந்த், தொண்டர்களைப் பார்த்து கையசைத்தார். செய்கை மூலம் முரசு சின்னத்துக்கு வாக் களிக்குமாறு கேட்டுக்கொண்டார். இவர் எண்ணூர் நெடுஞ் சாலை மணலி சாலை, தண்டையார் பேட்டை நெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதியில் ஒரே நாளில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
கேள்வி எழுப்பினார்
பின்னர் பிரச்சாரத்தின் இடையே ஒரு இடத்தில் விஜயகாந்த் பேசும்போது, “வாக்காளர்களுக்கு ரூ.4 ஆயிரம் கொடுப்பவர்கள், ஏழை மக்களுக்கு பட்டா கொடுக்க முடியுமா. நான் யாருக்கும் பயப்பட மாட்டேன். தேமுதிக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மதிவாணனுக்கு முரசு சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.