Published : 28 Apr 2017 08:52 AM
Last Updated : 28 Apr 2017 08:52 AM

தேர்வு கண்காணிப்பு, விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களின் மதிப்பூதியம் உயர்வு: தமிழக அரசு உத்தரவு

தேர்வு கண்காணிப்புப் பணி, விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களின் மதிப்பூதி யம், உழைப்பூதியத்தை உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை செயலர் த.உதயசந்திரன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:

பிளஸ் 2 தேர்வுப் பணியில் ஈடுபடும் தலைமை கண்காணிப்பாள ரின் மதிப்பூதியம் ரூ.115-ல் இருந்து ரூ.133 ஆகவும், துறை அலுவலர், கூடுதல் துறை அலுவலர்களுக்கு ரூ.80-ல் இருந்து ரூ.92 ஆகவும், வினாத்தாள் கட்டு காப்பாளருக்கு ரூ.69-ல் இருந்து ரூ.80 ஆகவும் உயர்த்தப்படுகிறது.

எஸ்எஸ்எல்சி தேர்வுப் பணியில் ஈடுபடும் தலைமை கண்காணிப்பாள ரின் மதிப்பூதியம் ரூ.92-ல் இருந்து ரூ.106 ஆகவும், துறை அலுவலர், கூடுதல் துறை அலுவலர்களுக்கு ரூ.57-ல் இருந்து ரூ.66 ஆகவும், வினாத்தாள் கட்டு காப்பாளருக்கு ரூ.46-ல் இருந்து ரூ.53 ஆகவும் அதிகரிக்கப்படுகிறது. இதேபோல இதர அலுவலர்கள், ஊழியர்களுக் கும் மதிப்பூதியம் திருத்தி அமைக்கப்படுகிறது.

பிளஸ் 2, ஆசிரியர் கல்வி பட்டயத் தேர்வுகளின் விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு தாள் ஒன்றுக்கு அளிக்கப்படும் உழைப் பூதியம் ரூ.7.50-ல் இருந்து ரூ.10 ஆகவும், எஸ்எஸ்எல்சி விடைத் தாள் திருத்துவோருக்கான உழைப் பூதியம் ரூ.6-ல் இருந்து ரூ.8 ஆகவும் உயர்த்தப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

தமிழக அரசுக்கு நன்றி

தேர்வு கண்காணிப்புப் பணி, விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களின் மதிப்பூதி யம், உழைப்பூதியத்தை உயர்த்தி வழங்கியதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பள்ளிக் கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட் டையன், துறைச் செயலர் த.உதய சந்திரன் ஆகியோருக்கு தமிழ் நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற் கல்வி ஆசிரியர் இயக்கங் கள் கூட்டமைப்பின் மாநில அமைப் பாளர் பா.ஆரோக்கியதாஸ், இணை அமைப்பாளர் செ.நா.ஜனார்த் தனன் ஆகியோர் நன்றி தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x