Published : 30 Jun 2016 08:29 AM
Last Updated : 30 Jun 2016 08:29 AM

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் ‘ஆபரேசன் சாத்ராக்’ ரோந்து ஒத்திகை

தமிழகத்தில் இலங்கை அகதிகள் முகாம்களில் உள்ள அக திகள், கள்ளத் தோணிகள் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு தப்பிச் செல்ல முயற்சித்த சம்பவம் அண் மையில் நடந்தது. இது போன்ற சம்பவங்களைத் தடுக்கவும், தீவிரவாதிகள் ஊடுருவலைத் தடுக்கவும் மீனவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற் காக தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கடல் பகுதிகளில் ‘ஆபரேசன் சாத்ராக்’ என்ற பெயரில் பாதுகாப்பு ஒத்திகை நடத்த அரசு உத்தரவிட்டது.

அதன்படி, நேற்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை ரோந்துப் பணி நடந்தது. இந்திய கடலோரக் காவல் படையின் ஐசிஜி அபிராஜ், ஐசிஜி வைபவ், ஐசிஜி ஆதேஷ் ஆகிய 3 ரோந்துக் கப்பல்கள் இதில் பங்கேற்றன. தமிழகக் கடலோர பாதுகாப்புக் குழுமத்தின் தூத்துக்குடி மாவட்ட பிரிவினர் டிஎஸ்பி ஸ்டேன்லி ஜோன்ஸ், ஆய்வாளர் முகேஷ் ஜெயக்குமார், உதவி ஆய்வாளர்கள் கோபி, பொன்ராஜ், வசந்தகுமார் ஆகியோர் தலைமையில் 3 அதிவிரைவுப் படகுகளில் கடல் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

மேலும், கடலோர பாதுகாப்புக் குழும போலீஸார், தரையிலும் தண்ணீரிலும் செல்லும் நவீன வாகனத்தில் ரோந்து சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x