Published : 04 Sep 2016 10:17 AM
Last Updated : 04 Sep 2016 10:17 AM

ஈரோட்டில் ரயில் இன்ஜின் தடம் புரண்டது: 2 மணி நேரம் தாமதத்தால் பயணிகள் அவதி

ஈரோட்டில் ரயில் இன்ஜின் தடம் புரண்டதால், ரயில் போக்குவரத்து 2 மணி நேரம் பாதிக்கப்பட்டது.

ஈரோட்டில் இருந்து நாள் தோறும் காலை 7.50 மணிக்கு பயணிகள் ரயில் திருச்சிக்கு இயக் கப்படுவது வழக்கம். நேற்று காலை வழக்கம்போல் 4-வது பிளாட்பாரத் தில் பயணிகள் ரயில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ஈரோடு டீசல் இன்ஜின் பணிமனையில் இருந்து டீசல் இன்ஜின் ரயில் பெட்டியுடன் இணைக்க கொண்டு செல்லப்பட்டது.

காலை 7.30 மணியளவில் 4-வது பிளாட்பாரம் செல்லும் வகையில், தண்டவாளம் பிரிக்கப்பட்டிருந்த இடத்தை இன்ஜின் கடந்தபோது, இன்ஜினின் முன்பக்கம் இருந்த 2 சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கின.

தகவல் அறிந்த இளநிலை மண்டல பொறியாளர் பரந்தாமன் தலைமையிலான ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தடம் புரண்ட இன்ஜினை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். காலை 9.30 மணியளவில் ரயில் இன்ஜின் சக்கரம் தண்டவாளத்தில் தூக்கி வைக்கப்பட்டது. காலை 10.10 மணியளவில் 4-வது பிளாட் பாரத்துக்கு ரயில் இன்ஜின் கொண்டு செல்லப்பட்டது. இதை யடுத்து, காலை 7.50 மணிக்கு புறப்பட வேண்டிய ஈரோடு - திருச்சி பயணிகள் ரயில் காலை 11 மணிய ளவில் புறப்பட்டுச் சென்றது.

ரயில் இன்ஜின் தடம் புரண்ட தால் 1-வது பிளாட்பாரத்தில் மட்டுமே ரயில்கள் செல்ல அனு மதிக்க முடிந்தது. மற்ற பிளாட் பாரத்தில் ரயில்கள் வந்து செல்ல அனுமதிக்கவில்லை. அதனால், காலை 8.45 மணிக்கு வரவேண்டிய கோவை - மயிலாடுதுறை சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் ஒரு மணி நேரம் தாமதமாக வந்தது. எழும்பூர் - மங்களூர் ரயில், தன்பாத் - ஆலப்புழா ரயில், ஈரோடு - திருச்சி பயணிகள் ரயில் ஆகியவை 2 மணி நேரம் தாமதமாக இயக்கப் பட்டன. இதனால் பயணிகள் அவ திப்பட்டனர். இன்ஜின் தடம் புரண்டது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x