Published : 23 Mar 2017 08:59 AM
Last Updated : 23 Mar 2017 08:59 AM

லெட்டர் பேடு கல்லூரிகளால் கல்வித்தரம் மோசம்: 5-ம் வகுப்பு படிக்கும் மாணவருக்கு பெயரைக்கூட எழுத தெரியவில்லை - சென்னை உயர் நீதிமன்றம் வேதனை

5-ம் வகுப்பு பயிலும் மாணவருக்கு தனது பெயரைக்கூட தவறில்லாமல் எழுதத் தெரியவில்லை. அந்த அளவுக்கு தமிழக கல்வித்தரம் மிகவும் மோசமடைந்துள்ளது என வேதனை தெரிவித்துள்ள உயர் நீதிமன்றம், இதற்கு புற்றீசல்போல பெருகியுள்ள லெட்டர்பேடு ஆசிரியப் பயிற்சி கல்வி நிறுவனங்களே காரணம் என சுட்டிக்காட்டியுள்ளது.

திருச்சியைச் சேர்ந்த தனியார் ஆசிரியர் பயிற்சி கல்லூரி நிர்வாகம் நடப்பு கல்வியாண்டில் பிஎட் பாடப்பிரிவில் மாணவர்களி்ன் எண்ணிக்கையை அதிகரிக்கவும், புதிதாக எம்எட் பாடப் பிரிவை தொடங்கவும் அனுமதி கோரியிருந் தது. ஆனால் இதற்கு தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் அனுமதி மறுத்துள்ளது. இதை எதிர்த்து அந்த கல்லூரி நிர்வாகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் அதிக எண்ணிக்கையிலான ஆசிரிய பயிற்சி கல்லூரிகளுக்கு இயந்திரத்தனமாக அனுமதி கொடுக்கிறது. ஆனால் அதைப்பற்றி தமிழக அரசு எந்த அக்கறையும் கொள்வதில்லை. தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியப் படிப்பை முடித்து வெளிவரும் ஆசிரியர்களின் கல்வித்தரம் கவலையளிக்கும் வகையில் உள்ளது. ஏனெனில், 5-ம் வகுப்பு படிக்கும் மாணவருக்கு தனது பெயரைக்கூட தவறு இல்லாமல் எழுதத் தெரியவில்லை. அந்த அளவுக்கு தமிழக கல்வித்தரம் மிகவும் மோசமடைந்துள்ளது.

புற்றீசல்போல பெருகியுள்ள எந்த அடிப்படை வசதிகளும் இல்லாத, உரிய விதிமுறைகளைப் பின்பற்றாத லெட்டர்பேடு கல்வி நிறுவனங்களும், அங்கு பயிலும் ஆசிரியர்களுமே இதற்கு முக்கியக் காரணம். தமிழகத்தில் திறமையான, தகுதியான ஆசிரியர்களின் எண் ணிக்கை மிகக் குறைவாக உள்ளது. இதனால்தான் தமிழக மாணவர்கள் பிற மாநில மாணவர்களோடு கல்வியில் போட்டி போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கல்வி வணிக ரீதியிலான தொழி லாக மாறிவிட்டதற்கு வரன்முறை இல்லாத கல்வி நிறுவனங்களும் ஒரு காரணம். இதை இப்போதே அதிகாரிகள் ஒழுங்குபடுத்த வில்லை எனில் ஆசிரிய பட்டதாரி களின் எண்ணிக்கையும் பெருகி அவர்களும் வேலையில்லாத் திண்டாட்டத்தில் சிக்க நேரிடும்.

எனவே இந்த வழக்கில் தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலையும் ஒரு எதிர்மனுதாரராக சேர்க்கிறேன். நாட் டில் எத்தனை ஆசிரியப் பயிற்சி கல்லூரிகள் உள்ளன? ஆசிரியப் படிப்பை முடித்துவிட்டு வேலையில் லாமல் காத்திருக்கும் பட்டதாரிகள் மற்றும் டிப்ளமோ படிப்பு முடித்தவர் கள் எத்தனை பேர்? இன்னும் எத் தனை ஆசிரியப் பயிற்சி கல்லூரி கள் தேவை? என்பன உள்ளிட்ட 10 கேள்விகளுக்கு தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலும், தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலைக்கழக மும் விரிவாக பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 27-க்கு தள்ளிவைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x