Published : 11 Sep 2016 10:05 AM
Last Updated : 11 Sep 2016 10:05 AM

சென்னையில் 2-வது நாளாக விநாயகர் ஊர்வலம்: 2,000-க்கும் மேற்பட்ட சிலைகள் இன்று கடலில் கரைப்பு - கடற்கரையில் முழு ஏற்பாடுகள்; பலத்த போலீஸ் பாதுகாப்பு

சென்னையில் விநாயகர் ஊர் வலம் 2-வது நாளாக இன்று நடக்கிறது. இந்து அமைப்புகள் வைத்திருக்கும் 2 ஆயிரத்துக்கும் அதிகமான விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு கடலில் கரைக்கப்படுகின்றன. இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற் பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 5-ம் தேதி கொண்டாடப்பட்டது. இதையொட்டி, சென்னை முழுவதும் 2,696 இடங்களில் பந்தல்கள் அமைக்கப்பட்டு விநாயகர் சிலை கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, பாரத் இந்து முன்னணி, விஷ்வ ஹிந்து பரிஷத், சிவசேனா, ஆர்எஸ்எஸ் உட்பட 14-க்கும் அதிகமான இந்து அமைப்பு கள் சார்பில் சென்னையில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான விநாய கர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த சிலைகள் சுமார் 20 அடி உயரம் கொண்டவை. இவை தவிர தனியார் அமைப்புகள், நலச்சங்கங்கள், ஓட்டுநர் சங்கத்தினர் சார்பிலும் ஆயிரத்துக்கும் அதிகமான இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.

விநாயகர் சிலைகள் ஊர்வலம் மற்றும் கரைப்பு நிகழ்ச்சி நேற்று தொடங்கியது. சங்கங்கள் சார்பில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் நேற்று ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன. நேற்று சுமார் 300 சிலைகள் கரைக்கப்பட்டன.

இந்நிலையில், இந்து அமைப்பு கள் சார்பில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் இன்று ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு கடலில் கரைக்கப்படுகின்றன. போலீ ஸாரால் அனுமதிக்கப்பட்ட 4 வழித் தடங்களில் மட்டுமே விநாயகர் ஊர்வலங்கள் நடைபெறும். 2 ஆயிரம் சிலைகள் இன்று கரைக் கப்படும் என்று தெரிகிறது.

வடசென்னை பகுதியில் உள்ள விநாயகர் சிலைகள் அனைத்தும் முத்துசாமி பாலம் அருகே ஒன்று கூடி ஊர்வலமாக சென்று பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் கடற்கரை யில் கரைக்கப்படும். மத்திய சென்னை பகுதியில் சிலை வைத்துள்ளவர்கள் வள்ளுவர் கோட்டம் மற்றும் திருவல்லிக்கேணி திருவட்டீஸ்வரன்பேட்டை பகுதி களில் ஒன்றுகூடி பாரதி சாலை வழியாக பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் கடற்கரைக்கு செல்ல வேண்டும்.

தென்சென்னை பகுதியில் உள்ளவர்கள் பள்ளிக்கரணை, மேட வாக்கம், வேளச்சேரி வழியாக நீலாங்கரை பல்கலை நகர் கடலில் கரைக்க வேண்டும். அனைத்து ஊர்வலங்களும் மதியம் 1.30 மணிக்கு புறப்படும்.

பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் கடற்கரை, நீலாங்கரை பல்கலை நகர் கடற்கரை, காசிமேடு மீன்பிடி துறைமுக கடற்கரை, திருவொற்றியூர் பாப்புலர் எடை மேடை கடற்கரை, எண்ணூர் ராமகிருஷ்ணா நகர் கடற்கரை ஆகிய 5 இடங்களில் கிரேன்கள் வைக்கப்பட்டுள்ளன. பெரிய விநாயகர் சிலைகளை கடலுக்குள் கொண்டு சென்று கரைக்க போலீஸ் சார்பில் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

விநாயகர் சிலைகள் ஊர்வலப் பாதுகாப்புக்கு 35 அதிரடிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. 5 கூடுதல் ஆணையர்கள், 6 இணை ஆணையர்கள் 22 துணை ஆணையர்கள், 60 உதவி ஆணை யர்கள் தலைமையில் 15 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். அதிக சிலைகள் கரைக்கப்படும் பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் கடற்கரை பகுதியில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 3 இடங்களில் கண் காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்

ளன. தீயணைப்பு வாகனம், மீட்பு படை, ஆம்புலன்ஸ் போன்றவையும் கடற்கரையில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

கடலோர பாதுகாப்பு குழுமம் சார்பிலும் முன்னெச்சரிக்கை ஏற் பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 5 நீச்சல் வீரர்கள், 5 வீரர்கள் என மொத்தம் 10 பேர் ஒரு படகில் கடலோரத்தில் தொடர்ந்து சுற்றுவார்கள்.

இன்று விநாயகர் ஊர்வலம் செல்லும் பாதைகளில் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் ஊர்வலம் செல்லும் சாலைகளில் செல் பவர்கள் முன்கூட்டியே பயணத்தை திட்டமிடுமாறு போலீஸார் தெரிவித்துள்ளனர். திங்கள், செவ்வாயன்றும் விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x