திருப்பூரில் மதுபானக் கடைக்கு எதிராக போராடிய பெண்ணை தாக்கிய போலீஸ் அதிகாரி மீது துறைரீதியான நடவடிக்கை

திருப்பூரில் மதுபானக் கடைக்கு எதிராக போராடிய பெண்ணை தாக்கிய போலீஸ் அதிகாரி மீது துறைரீதியான நடவடிக்கை
Updated on
2 min read

உயர் நீதிமன்றத்தில் அரசு தலைமை வழக்கறிஞர் உறுதி

திருப்பூரில் மதுபானக் கடையை அகற்றக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணை தாக்கிய போலீஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக அரசு தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார். இதையடுத்து இது தொடர்பான வழக்கை முடித்து வைத்து உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

வழக்கறிஞர் சமூக நீதி பேரவைத் தலைவர் கே.பாலு, சென்னை உயர் நீதி மன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகி யோரைக் கொண்ட அமர்வில் நேற்று அவசர மனு தாக்கல் செய்தார். சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, வழக்கறிஞர் ஏ.பி.சூர்ய பிரகாசம் ஆகியோரும் முறையீடு செய்தனர். மனுவில் பாலு கூறியிருந்ததாவது:

நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபானக் கடைகளை அகற்ற சமீபத்தில் உச்ச நீதிமன்றம் உத்தர விட்டது. ஆனால், மாநில அரசு அதிகாரிகள் நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபானக் கடைகளை மக்கள் குடியிருப்பு நிறைந்த பகுதிகளுக்கு சட்ட விரோதமாக இடமாற்றம் செய்து வருகின் றனர்.

திருப்பூர் மாவட்டம் சாமளா புரத்தில் மதுபானக்கடை அமைக் கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து போராடிய பெண்கள் மற்றும் இளைஞர்கள் மீது கூடுதல் எஸ்பி பாண்டியராஜன் தலைமையிலான போலீஸார் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் ஈஸ்வரி என்ற பெண்ணும், சிவகணேஷ் என்ற வாலிபரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

பெண்களை போலீஸ் அதிகாரி கள் கண்மூடித்தனமாக தாக்குவது தமிழகத்தில் தொடர்கதையாகி வருகிறது. எனவே, தவறு செய்த போலீஸ் அதிகாரி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக பொதுநல மனு தாக்கல் செய்யவிருப்பதால் அதை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் குறிப்பிட் டிருந்தார்.

அதன்படி, பிற்பகலில் இந்த வழக்கு தலைமை நீதிபதியைக் கொண்ட முதன்மை அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.முத்துக்குமாரசாமி ஆஜராகி, ‘‘அந்த மதுபானக் கடையை சாமளா புரத்தில் அமைக்க பிறப்பிக்கப் பட்ட உத்தரவு ரத்து செய்யப்பட் டுள்ளது. போராட்டத்தில் போலீஸ் அதிகாரிகள் மீதும் போலீஸ் வாகனங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதன்பிறகு தான் போலீஸ் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது லேசான தடியடி நடத்தியுள்ளனர். பெண்கள் மீது தாக்குதல் நடத்திய போலீஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க ஏற்கெனவே உத்தரவிடப்பட்டுள்ளது. அவர் மீது துறைரீதியான விசாரணையும் நடந்து வருகிறது’’ என்றார்.

அதையடுத்து நீதிபதிகள், ‘‘பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக சிகிச்சை வழங்குவது மிக முக்கியம். அவர்களுக்கு அவர்கள் விருப்பப்பட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டும். சிகிச்சைக்கான அனைத்து செலவுகளையும் அரசே ஏற்க வேண்டும். இந்த சம்பவம் தொடர்பாக தவறு செய்த போலீஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுப்பதாகவும், மதுபானக் கடை அமைக்க பிறப்பிக்கப்பட்ட உத் தரவு ரத்து செய்யப்பட்டுள்ளதாக வும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபானக் கடைகளை அகற்ற உச்ச நீதிமன்றம் என்ன உத்தரவு பிறப்பித்துள்ளதோ, அந்த உத்தரவுப்படி கடைகளை இடமாற்றம் செய்யும்போது சட்ட ரீதியாக அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்பதை நாங்கள் சொல்ல வேண்டிய அவசியமில்லை என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in