

ஆளுநர் அளித்துள்ள 15 நாட்கள் அவகாசம் தமிழகத்தில் நிலையான ஆட்சி ஏற்பட வழிவகுக்கும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழக ஆளுநர் ஜனநாயக முறைப்படி முடிவு எடுத்து இன்று எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராகப் பதவியேற்க அழைப்பு விடுத்து, 15 நாட்களில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இன்றைக்கு தமிழகத்தில் இருக்கின்ற அரசியல் குழப்பமான சூழலில் 15 நாட்கள் அதிகம் என்றாலும் கூட இந்த முடிவு - தற்போதைய நிலையற்ற தன்மை மாறி நிலையான ஆட்சி ஏற்பட வழிவகுக்கும் என்று நம்புகிறேன்'' என்று வாசன் கூறியுள்ளார்.