கோவை ஜன் சதாப்தி உட்பட 3 ரயில்களில் நிரந்தர பெட்டிகள் சேர்ப்பு

கோவை ஜன் சதாப்தி உட்பட 3 ரயில்களில் நிரந்தர பெட்டிகள் சேர்ப்பு
Updated on
1 min read

கோவை ஜன் சதாப்தி உட்பட 3 விரைவு ரயில்களில் நிரந்தர பெட்டிகள் சேர்க்கப்பட்டு வரும் 20-ம் தேதி முதல் இயக்கப்படுகிறது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கோயம்புத்தூர் மயிலாடுதுறை கோயம்புத்தூர் (12084/12083) ஜன் சதாப்தி விரைவு ரயில்களில் வரும் 20-ம் தேதி முதல் 2 முன்பதிவு பெட்டிகளும், சென்னை சென்ட்ரல் விஜயவாடா சென்னை சென்ட்ரல் ஜன் சதாப்தி விரைவு ரயில்களில் (12077/12078) 2 முன்பதிவு பெட்டிகளும் நிரந்த ரமாக இணைத்து இயக்கப்படு கிறது.

இதேபோல், திருவனந்தபுரம் கோழிக்கோடு திருவனந் தபுரம் ஜன் சதாப்தி விரைவு ரயில்களில் (12075/12076) வரும் 21-ம் தேதி முதல் ஒரு பெட்டி நிரந்தரமாக இணைத்து இயக்கப்படுகிறது.

சென்னை சென்ட்ரலில் இருந்து வரும் 19-ம் தேதி காலை 11 மணிக்கு புறப்படும் சிறப்புக் கட்டண சிறப்பு ரயில் (06071) நள்ளிரவு 12.15 மணிக்கு செகந்திராபாத்துக்கு செல்லும். மேற்கண்ட சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு இன்று தொடங்கு கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in