Published : 08 Apr 2017 08:50 AM
Last Updated : 08 Apr 2017 08:50 AM

சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் சரிவு: குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த குடிநீர் வாரியம் அறிவுறுத்தல்

வறட்சியால் சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் சரிந்து வரும் நிலையில், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று சென்னை குடிநீர் வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

சென்னை மாநகரம் 426 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் விரிந்து கிடக்கிறது. இப்பகுதி கள் மணல், களிமண், பாறை சார்ந்த பகுதிகளாக உள்ளன. இந்த 3 விதமான பகுதிகளிலும் நிலத்தடிநீர் மட்டம் மற்றும் நீர் ஊடுருவும் தன்மை வேறுபடும். குடிநீர் வாரியம் சார்பில் இப்பகுதி முழுவதும் 145 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கிணறுகள் மூலம், மாதந்தோறும் நிலத்தடி நீர்மட்டம் மற்றும் நீரின் உப்புத் தன்மை குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

தற்போதைய நிலவரம் குறித்து குடிநீர் வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கடந்த ஆண்டு மார்ச் மாத நிலத்தடி நீர்மட்டத்தை, இந்த ஆண்டு மார்ச் மாத நிலத்தடி நீர்மட்டத்தோடு ஒப்பிடும்போது, குறைந்தபட்சமாக சோழிங்க நல்லூர் பகுதியில் 0.70 மீட்டரும், அதிகபட்சமாக திரு.வி.க.நகர் பகுதியில் 2.88 மீட்டரும் குறைந்துள்ளது.

சென்னையில் கடந்த ஆண்டு குறைவான மழைப் பொழிவு இருந்ததால்தான், இந்த ஆண்டு நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளது.

சிக்கனமாக பயன்படுத்துங்கள்

அதனால், குடிநீர் வாரியத் தால் சுத்திகரித்து வழங்கப் படும் குடிநீரை குடிப்பதற்கும், சமைப்பதற்கும் பயன்படுத்த வும். இதர தேவைகளுக்கு நிலத்தடி நீரை பயன்படுத்தவும். குழாயில் ஏற்படும் கசிவை உடனடியாக சரி செய்ய வேண் டும். பயன்பாட்டில் இல்லாத குழாய்களை மூடிவைக்க வேண்டும். சமையலறை மற்றும் குளியலறையில் இருந்து வெளியேறும் நீரை தோட்டம் மற்றும் செடிகளுக்கு பாய்ச்ச வேண்டும்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x