Published : 07 Jun 2017 09:21 AM
Last Updated : 07 Jun 2017 09:21 AM

தங்கம் பவுனுக்கு ரூ.144 உயர்வு

தங்கம் பவுனுக்கு ரூ.144 உயர்ந்து ரூ.22 ஆயிரத்து 624-க்கு விற்கப்பட்டது.

சர்வதேச அளவில் தங்கம் விலை நேற்று கணிசமாக அதிகரித்து இருந்தது. அதனால், உள்ளூரிலும் தங்கம் விலையில் உயர்வு காணப்பட்டது. நேற்று சென்னையில் 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.18 அதிகரித்து 2 ஆயிரத்து 828-க்கும், பவுனுக்கு ரூ.144 உயர்ந்து ரூ.22 ஆயிரத்து 624-க்கும் விற்கப்பட்டது. நேற்று முன்தினம் தங்கம் கிராம் ரூ.2 ஆயிரத்து 810-க்கும், பவுன் ரூ.22 ஆயிரத்து 480-க்கும் விற்பனையானது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x