

சென்னை மாநகராட்சி சார்பில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் பள்ளிகளில் 15 லட்சத்து 6 ஆயிரத்து 676 குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் ரத்தசோகையால் குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். அதன் காரணமாக குழந்தைகள் உடல் வளர்ச்சி குன்றியும், எடை குறைவாகவும் காணப்படுகின்றனர்.
இதை தவிர்க்கும் பொருட்டு ஆண்டுதோறும், நாடு தழுவிய குடற்புழு நீக்க நாள் கடைபிடிக் கப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சி சார்பில் குடற்புழு நீக்க நாள் பிப்ரவரி 10-ம் தேதி கடைபிடிக்கப்பட்டது. இதை யொட்டி சென்னை மாநகராட்சிக்குட் பட்ட அனைத்து ஆரம்ப சுகாதார மையங்கள், மாநகராட்சி பள்ளி கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், அங்கன்வாடி மையங்களில் குடற்புழு நீக்க மாத்திரைகள் ஒரே நாளில் வழங் கப்பட்டது. விடுபட்ட குழந்தை களுக்கு 15-ம் தேதி வழங்கப்பட்டது. இதில் மொத்தம் 15 லட்சத்து 6 ஆயிரத்து 676 குழந்தைகளுக்கு (94 சதவீதம்) குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டது. விடுபட்ட குழந்தைகளுக்கு இந்த வார இறுதிக்குள் மாத்திரை கள் வழங்கப்படும். இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.