Published : 25 Nov 2014 10:21 AM
Last Updated : 25 Nov 2014 10:21 AM

நில விற்பனையை ரத்து செய்யுமாறு தா.பாண்டியனுக்கு கட்சி மேலிடம் கெடு?

தொழிற்சங்க நிலத்தை குறைந்த விலைக்கு விற்பனை செய்த, நில விற்பனை பதிவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் ஒரு வாரத்துக்குள் ரத்து செய்ய வேண் டும் என கட்சியின் மாநிலக் குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ள தாக அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிலர் தெரிவித்தனர்.

சவுத் மெட்ராஸ் எலெக்ட்ரிசிட்டி ஒர்க்கர்ஸ் யூனியன் என்ற அமைப்புக்குச் சொந்தமான திருச்சி பழைய குட்ஷெட் சாலையில் உள்ள 5,000 சதுர அடி நிலத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளரான தா.பாண்டியன், சென்னை பெரம்பூரில் வசிக்கும் ரபீக் அகமது என்பவருக்கு ரூ.20 லட்சத்துக்கு கடந்த 2012 மார்ச் 22-ம் தேதி கிரயம் செய்து கொடுத்துள்ளார்.

அந்த நிலத்துக்கு அரசு வழி காட்டி மதிப்பு ரூ.90 லட்சம். சந்தை மதிப்பு ரூ.3 கோடி. குறைந்த விலைக்கு விற்பனை செய்ததன் மூலம் தா.பாண்டியன் மோசடி செய் துள்ளார். அதனால் முறைகேடாக விற்பனை செய்யப்பட்ட இந்த நில விற்பனையை நீதிமன்றம் ரத்து செய்து நிலத்தை திருச்சி மாவட்ட ஏஐடியுசி அமைப்பிடம் அல்லது தமிழ்நாடு மின்வாரிய தொழிலாளர் சம்மேளனத்திடம் இந்த நிலத்தை ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரி திருச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஏஐடியுசி திருச்சி மாவட்ட பொதுச் செயலர் மணி வழக்கு தாக்கல் செய்திருந்தார். இதுகுறித்த செய்தி கடந்த செப்டம்பர் 29-ம் தேதி ‘தி இந்து’-வில் வெளிவந்தது.

திருச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்துவரும் இந்த வழக்கு முதன்மை அமர்வு நீதிபதி உத்திராபதி விடுப்பில் உள்ளதால் 3-வது மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி உமா மகேஸ்வரி முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கை எதிர்கொள்வது தொடர்பாக பல்வேறு மாவட்டங் களில் இருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வழக்கறிஞர்கள் சுமார் 20 பேர் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் திருச்சி மாவட்ட கட்சி அலுவலகத்தில் நேற்று நடை பெற்றது.

இதுகுறித்து ‘தி இந்து’-விடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர், “கடந்த 19-ம் தேதி சென்னையில் நடைபெற்ற மாநில நிர்வாகிகள் குழுக் கூட்டத்தில் கட்சியின் அகில இந்திய தலைவர்கள் சுதாகர் ரெட்டி, டி.ராஜா ஆகியோர் இந்த நில விற்பனை குறித்து விசாரணை செய்துள்ளனர். 31 உறுப்பினர் களைக் கொண்ட இந்த குழுவில் 29 பேர் கலந்துகொண்டனர். ஒரு வாரத்துக்குள் நில விற்பனையை தா.பாண்டியன் ரத்து செய்யவேண்டும் என கெடு விதித்தும், நில விற்பனையை ரத்து செய்த பிறகு திருச்சி மாவட்ட ஏஐடியுசி அமைப்பு திருச்சி நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை வாபஸ் பெறவேண்டும் எனவும் கூட்டத்தில் முடிவு செய்து அறிவித்துள்ளனர்.

அப்போது தா.பாண்டியன் ஆதரவாளர்கள், நிலத்தை வாங்கி யவர் வெளிநாடு சென்றுள்ளார் எனக் கூறினர். இந்த காரணத்தை அகில இந்திய தலைவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஏற் கெனவே ஓராண்டுக்கு முன் திருப் பூரில் நடைபெற்ற மாநிலக் குழு கூட்டத்தில் இந்த நில விற் பனையை ரத்து செய்ய சொல்லி முடிவெடுக்கப்பட்டது. அப்போதே அந்த முடிவை செயல்படுத்தி யிருந்தால் கட்சிக்கு இந்த கெட்ட பெயர் ஏற்பட்டிருக்காது என வருத்தம் தெரிவித்தனர்” என்றார்.

கட்சி விதித்த கெடு முடியப் போகும் நிலையில், நில விற் பனையை ரத்துசெய்யாமல் வழக்கை எதிர்கொள்ள கட்சி யின் வழக்கறிஞர்கள் படையைத் திரட்டுவதைப் பார்க்கும்போது மாநிலக் குழுவில் எடுக்கப்பட்ட முடிவுக்கு எதிராகச் செயல்பட தா.பாண்டியன் முடிவெடுத்திருப் பதாகத் தெரிகிறது என்றார் கட்சியின் இன்னொரு மூத்த நிர்வாகி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x