

தீவிரவாத அமைப்பு அச்சுறுத் தலால், சென்ட்ரல் ரயில் நிலையத் தில் பலத்த பாதுகாப்பு போடப் பட்டுள்ளது. வெடிகுண்டு நிபுணர் கள், மோப்ப நாய்கள் சோதனை யில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
நெய்வேலி அனல் மின் நிலையம், திருச்சி பாரத மிகு மின் நிறுவனம் (பெல்) உட்பட நாட்டில் உள்ள முக்கிய தொழிற்சாலைகள் மற்றும் முக்கிய இடங்களை வெடிகுண்டு வைத்து தகர்க்க அல்-கொய்தா அமைப்பு திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் ரயில் நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ரயில்வே டிஎஸ்பி தில்லை நடராஜன், ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் அழகர்சாமி தலைமையிலான போலீஸார், வெடிகுண்டு நிபுணர்கள் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நேற்று சுமார் 3 மணி நேரம் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
பயணிகளின் உடைமைகள் மற்றும் ரயில்களிலும் சோதனை நடைபெற்றது. மோப்ப நாய்கள் சோதனையில் ஈடுபடுத்தப்பட்டன. பயணிகள் அனைவரும் தீவிர சோதனைக்கு பிறகே, ரயில் நிலையத்தின் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.