சி.பி.ஐ. வழக்கறிஞராக கே.சீனிவாசன் நியமனம்

சி.பி.ஐ. வழக்கறிஞராக கே.சீனிவாசன் நியமனம்
Updated on
1 min read

சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் சி.பி.ஐ. வழக்குகளில் ஆஜராகும் அரசு குற்றவியல் வழக்கறிஞராக மூத்த வழக்கறிஞர் கே.சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான நியமன உத்தரவை சி.பி.ஐ. பிறப்பித்துள்ளது. கடலூர் மாவட்டம் மாளிகைமேடு கிராமத்தில் விவசாய குடும்பம் ஒன்றில் கடந்த 1954-ம் ஆண்டு பிறந்த சீனிவாசன், புதுச்சேரியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றார். கடந்த 1983-ம் ஆண்டு முதல் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞராக அவர் பணியாற்றி வருகிறார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in