Last Updated : 02 Mar, 2017 12:01 PM

 

Published : 02 Mar 2017 12:01 PM
Last Updated : 02 Mar 2017 12:01 PM

புதிய குடிநீர் திட்டப் பணிகள் தாமதம்: கம்பம் நகராட்சியில் தண்ணீர் கிடைக்காமல் மக்கள் அவதி

கம்பம் நகரில் ரூ.18.8 கோடி மதிப்பீட்டில் மூன்றரை ஆண்டு களுக்கு முன்பு தொடங்கப்பட்ட குடிநீர் மேம்பாட்டுத் திட்டப்பணி தாமதமடைந்துள்ளதால், போதிய குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

தேனி மாவட்டம் கம்பம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. 69,183 பேர் வசிக்கின்றனர். சுருளிபட்டி மற்றும் லோயர்கேம்ப் பெரியாற்றில் உறை கிணறு அமைத்து நகராட்சி நிர்வாகம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

இந்நிலையில், மக்கள்தொகை பெருக்கத்தால் அதிகரித்து வரும் குடிநீர் தேவை, கோடைகாலத்தில் ஏற்படும் குடிநீர் பற்றாக்குறை ஆகியவற்றை சமாளிக்க நகராட்சி நிர்வாகம் சார்பில் ரூ.18.8 கோடி மதிப்பீட்டில் கடந்த 2013-ம் ஆண்டு மே மாதத்தில் புதிய குடிநீர் மேம்பாட்டுத் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது.

இந்த திட்டத்தின் படி லோயர்கேம்ப் பெரியாற்றில் உறை கிணறு அமைத்து, அங்கிருந்து 18 கி.மீ. தூரத்தில் கம்பம் நகர் வரை தரையில் ராட்சத குழாய்கள் பதித்து குடிநீர் விநியோகிக்க முடிவு செய்யப்பட்டது. ஏற்கெனவே 6 மேல்நிலை குடிநீர்த் தொட்டி இருந்த நிலையில், மேலும் 4 குடிநீர்த் தொட்டிகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. இத்திட்டப் பணிகள் இம் மாத இறுதிக்குள் நிறைவு செய்ய முடிவு செய்ய ப்பட்டிருந்தது.

ஆனால், தற்போது பணிகள் நிறைவுபெ றவில்லை. இதன் காரணமாக மக்கள் போதிய குடிநீரின்றி அவதிப்படுகின்றனர். புதிய குடிநீர்த் திட்டத்தை செயல்படுத்துவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தால் தங்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமம் குறித்து கம்பம் நகரில் வசிப்போர் சிலர் கூறியதாவது:

மணிகண்டன் (டீக்கடை ஊழியர்):

வாரத்துக்கு ஒருமுறை அல்லது 15 நாட்களுக்கு ஒருமுறை நள்ளிரவு நேரங்களில் மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப் படுகிறது. இதனால் தண்ணீர் பிடிக்க முடியவில்லை. பல இடங்களில் தெருக் குழாய்கள் உடைந் துள் ளதால், தண்ணீர் வீணாகிறது. இதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வே ண்டும்.

வடமல்ராஜ் (வெல்டிங் ஒர்க்ஷாப்):

சில இடங்களில் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் கலந்து வருகிறது. இதை குடிக்கும் மக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. 34-வது வார்டு நந்தனார் காலனி பகுதியில் மதியம் 2 மணிக்கு தண்ணீர் திறந்து விடுவதால் அலுவலக ங்களுக்குச் செல்வோரால், தண்ணீர் பிடிக்க முடியாத நிலை ஏற்படுகிறது.

சாதிக் அலி (வியாபாரி):

பகல் நேரத்தில் தண்ணீர் விநியோகிக்க வேண்டும். தண்ணீர் திறந்துவிடும் நேரத்தை முறையாக அறிவித்து, அதன்படி செயல்பட வேண்டும். குடிநீர் மேம்பாட்டுத் திட்டத்தை விரைவாக முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு நகராட்சி நிர் வாகம் கொண்டு வர வேண்டும்.

மே மாதத்துக்குள் குடிநீர் விநியோகம்

கம்பம் நகராட்சி ஆணையர் எஸ்.அலாவுதீன் கூறியதாவது: நகரில் 2 நாட்களுக்கு ஒருமுறை பகல் நேரத்தில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. 1965 மற்றும் 1985-ம் ஆண்டுகளில் லோயர்கேம்ப்பில் இருந்து 18 கி.மீ. தூரத்துக்கு ராட்சத குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டன. அவை பழுதடைந்து விட்டதால் தற்போது புதிய குழாய்கள் பதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. 2013-ம் ஆண்டு பணியை எடுத்த ஒப்பந்ததாரர் விரைவாக செயல்படாததால், 2015-ம் ஆண்டு புதிய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. தற்போது 85 சதவீதம் பணிகள் நிறைவடைந்துவிட்டன. மேல்நிலை குடிநீர்த் தொட்டி அமைக்கும் பணிகள் நிறைவடைந்துவிட்டன. சில இடங்களில் குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. மே மாதத்துக்குள் புதிய குடிநீர் மேம்பாட்டுத் திட்டத்தில் குடிநீர் விநியோகம் தொடங்கும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x