Published : 05 Feb 2017 10:33 AM
Last Updated : 05 Feb 2017 10:33 AM

தமிழக அரசு ஆலோசகராக இருந்த ஷீலா பாலகிருஷ்ணன் ராஜினாமா ஏற்பு

தமிழக அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணனின் பதவி விலகல் கடிதத்தை தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஏற்றுக் கொண்டுள்ளதாக தலைமைச் செய லக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2011-ல் அதிமுக ஆட்சி அமைந்ததும் ஷீலா பாலகிருஷ் ணன் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். ஓராண்டிலேயே அவர் ஓய்வு பெற்றதும் அரசின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார். 2012 முதல் கடந்த 4 ஆண்டுகளாக அவர் ஆலோசகராக செயல்பட்டு வருகிறார். கடந்த செப்டம்பர் 22-ம் தேதி மருத்துவமனையில் ஜெய லலிதா அனுமதிக்கப்பட்டது முதல் அங்கேயே இருந்து அனைத்தையும் கவனித்துக் கொண்டார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஓ.பன்னீர்செல்வம் முதல்வரான நிலையிலும் ஆலோசகர் பதவியில் அவர் தொடர்ந்து வந்தார். ஜல்லிக் கட்டு அவசரச் சட்டம் தொடர் பாக கடந்த 19-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்துப் பேசி னார். அப்போது தலைமைச் செய லாளர் கிரிஜா வைத்தியநாதனுடன் ஷீலா பாலகிருஷ்ணனும் சென்றி ருந்தார். கடந்த வாரம் நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத் தொடரி லும் அதிகாரிகளுடன் அமர்ந்து அரசுக்கு ஆலோசனை வழங்கி வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அவர், தனது பதவி விலகல் கடிதத்தை தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனிடம் அளித்த தாகக் கூறப்படுகிறது. அதுபோல முதல்வரின் செயலாளராக இருந்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி கே.என்.வெங்கடரமணனும் பதவி விலகியுள்ளதாக தலைமைச் செய லக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் இருவரின் பதவி விலகல் கடிதத்தை தலைமைச் செயலாளர் ஏற்றுக்கொண்டுள்ளதாக கூறப்படு கிறது.

ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி களுக்கு முக்கியப் பதவிகள் அளிக் கப்படுவதால் பணியில் இருக்கும் அதிகாரிகளின் வாய்ப்பு பறிக்கப் படுவதாக புகார் எழுந்தது. இந்நிலை யில் முக்கியப் பொறுப்பில் இருந்து ஓய்வுபெற்ற அதிகாரிகள் இருவர் பதவி விலகியுள்ளனர். முதல்வரின் மற்றொரு செயலாளர் ராமலிங்கத்துக்கும் வேறு பணி வழங்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

மர்மமாக உள்ளது

சென்னை எண்ணூரில் கடல் நீரில் கலந்த எண்ணெய் அகற்றும் பணிகளைப் பார்வையிட வந்த திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டா லினிடம் இதுகுறித்து கேட்டபோது, ‘‘ஜெயலலிதாவால் தமிழக அரசின் ஆலோசகராக நியமிக்கப்பட்ட ஷீலா பாலகிருஷ்ணன் பதவி விலகி யதாக செய்திகள் வருகின்றன. ஆனால், அதிகாரப்பூர்வமாக எந்தத் தகவலும் இல்லை. பணிமூப்பு அடிப்படையில் பொறுப்புகளை வழங்க வேண்டிய அரசு, ஓய்வு பெற்றவர்களுக்கு முக்கியப் பதவி களை அளித்து வருகிறது. இதனால் பணியில் இருப்பவர்கள் உரிய பதவி உயர்வு கிடைக்காமல் உள்ளனர். அதிமுக ஆட்சியில் நடப்பது அனைத்தும் மர்மமாகவே உள்ளது. மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் மர்மமாகவே உள்ளது. அதுபோலவே இப்போது அதிகாரிகள் பதவி விலகினார்களா, இல்லையா? என்பதும் மர்மமாகவே உள்ளது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x