Published : 19 Jan 2014 06:36 PM
Last Updated : 19 Jan 2014 06:36 PM

இருநாட்டு மீனவர் பேச்சுவார்த்தை தாமதத்துக்கு தமிழக அரசே காரணம்: மத்திய அமைச்சர் நாராயணசாமி குற்றச்சாட்டு

இரு நாட்டு மீனவர்களுக்கிடையே பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு முனைந்தபோது, தமிழக அரசு ஒன்றரை வருடம் காலம் தாழ்த் தியது என்று மத்திய அமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் அவர் ஞாயிற்றுக் கிழமை கூறியதாவது:

இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை விடு விக்க நடவடிக்கை எடுக்குமாறு, அங்குள்ள இந்திய தூதரகத்தின் அதிகாரி குமரனிடம் வலியுறுத்தி உள்ளோம். இரு நாட்டு மீனவர் களின் நலன்கருதி, இருதரப்பு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசியல் ஆதாயத்துக்காக காங்கிரஸ் கட்சி இதைச் செய்யவில்லை.

இரு நாட்டு மீனவர்களுக் கிடையே பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு முனைந்தபோது, தமிழக அரசு ஒன்றரை ஆண்டு காலம் தாழ்த்தியது. தமிழக முதல்வருக்கு பிரதமர் கடிதம் எழுதியதைத் தொடர்ந்து தற்போது தமிழக அரசு பேச்சு வார்த்தைக்கு தேதி குறித்துள்ளது. இந்தப் பேச்சுவார்த்தை, டிசம்பர் மாதத்திலேயே நடக்க வேண்டியது. ஆனால், பல்வேறு காரணங்களால் தள்ளிப்போனது.

இப்போது நடக்கவுள்ள பேச்சு வார்த்தை, 2 நாட்டு மீனவர் களிடையே சுமுக உறவை ஏற் படுத்தும். குறிப்பாக இந்திய மீனவர் கள் இலங்கை கடல்பகுதியிலும், இலங்கை மீனவர்கள் இந்திய கடல்பகுதியிலும் எவ்வளவு தூரம் கடலில் சென்று மீன் பிடிக்கலாம் என்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தம் ஏற்படுத்தப்படும்.

பிப்ரவரி 5-ம் தேதி நாடாளு மன்றம் மீண்டும் கூடுகிறது. இதில், தனி தெலங்கானா, ஊழல் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு பாது காப்பு அளிப்பது, வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வந்து தொழிலில் ஈடுபடும்போது, ஊழல் புரிந்தால் அவர்கள் மீது இந்திய சட்டப்படி தண்டனை வழங்குவது ஆகிய மசோதாக்களை தாக்கல் செய்து நிறைவேற்ற முயற்சி செய்து வருகிறோம். லஞ்சம் வாங்குவது குற்றம் என்ற ஷரத்துடன் லஞ்சம் கொடுப்பதும் குற்றம் என லோக்பால் மசோதாவில் சட்டத் திருத்தமும் செய்யப்பட உள்ளது.

இவ்வாறு நாராயணசாமி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x