

தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ஆசிரியர் தேர்வு வாரியம் முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் (கிரேடு-1) பணியிடங்களுக்கான போட்டித்தேர்வை ஜூலை 2-ம் தேதி நடத்த உள்ளது. இத்தேர்வுக்கு 2 லட்சத்து 18,591 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கு தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு (ஹால்டிக்கெட்) ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் (>www.trb.tn.nic.in) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியைக் குறிப்பிட்டு நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கடைசி நேர பதற்றத்தை தவிர்க்கும் பொருட்டு நுழைவுச்சீட்டு முன்னதாகவே வெளியிடப்பட்டுள்ளது. எனவே, தேர்வர் கள் ஒரு வாரத்துக்கு முன்னதாகவே தேர்வுக்கூட அனுமதிச்சீட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.