Last Updated : 18 Nov, 2014 10:09 AM

 

Published : 18 Nov 2014 10:09 AM
Last Updated : 18 Nov 2014 10:09 AM

ஐசிசி தரவரிசை: முதல் இடத்தில் இந்தியா

இலங்கை அணியை 5-0 என்று ஒருநாள் தொடரில் தோற்கடித்த இந்திய அணி, ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

ஒருநாள் தொடர் ஆரம்பிக்கும் முன்பு 113 புள்ளிகளுடன் 3-ம் இடத்தில் இருந்த இந்திய அணி, தொடரின் முடிவில், 117 புள்ளிகள் பெற்று முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. இரண்டாம் இடத்தில் உள்ள தென் ஆப்பிரிக்கா அணி, இந்திய அணியை விடவும் 2 புள்ளிகள் குறைவாகப் பெற்றுள்ளது. ஒருநாள் தொடரில் தோற்ற இலங்கை அணி, 4ம் இடத்தில் உள்ளது. இப்போது நடந்துவரும் ஆஸ்திரேலியா – தென் ஆப்பிரிக்கா ஒருநாள் தொடரில், எந்த அணி 4-1 என்று ஜெயிக்கிறதோ அந்த அணி ஐசிசி தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தைப் பிடிக்க வாய்ப்புள்ளது. இல்லாவிட்டால் இந்திய அணியே முதலிடத்தில் நீடிக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x