Published : 04 Sep 2016 09:41 AM
Last Updated : 04 Sep 2016 09:41 AM

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டில் சிறப்பு சந்தை திறப்பு: பூஜை பொருட்கள் வாங்க அலைமோதிய கூட்டம்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டில் சிறப்பு சந்தை திறக்கப்பட்டுள்ளது. அங்கு பூஜைப் பொருட்கள் வாங்க நேற்று ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்.

ஆண்டுதோறும் ஆயுதபூஜை, பொங்கல் பண்டிகையின்போது கோயம்பேடு மார்க்கெட் நிர்வாகக் குழு சார்பில் சிறப்பு சந்தை திறக் கப்படும். வழக்கமாக கோயம்பேடு சந்தையில் கிடைக்காத பூஜைப் பொருட்கள் போன்றவை சிறப்பு சந்தையில் கிடைக்கும் என்பதால், மக்கள் மத்தியில் இது பெரும் வரவேற்பைப் பெற்றது. முதல் முறையாக விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கடந்த ஆண்டு சிறப்பு சந்தை திறக்கப்பட்டது. அதுவும் நல்ல வரவேற்பைப் பெற்றதால், தற்போதும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோயம்பேடு பூ மார்க் கெட் வளாகத்தில் சிறப்பு சந்தை நேற்று முன்தினம் திறக்கப்பட்டது.

இந்த சந்தையில் 500-க்கும் அதிக மான கடைகள் வைக்கப்பட்டுள் ளன. இங்கு பூஜைக்கு தேவையான பொருட்களை வாங்க நேற்று மாலை ஆயிரக்கணக்கானோர் குவிந்ததால் கூட்டம் அலைமோதியது. இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்தை சரிசெய்து, பொதுமக்களை ஒழுங்குபடுத்தும் பணியில் போலீஸார் ஈடுபட்டனர்.

விலை நிலவரம்

இந்த சிறப்பு மார்க்கெட்டில் விநாயகர் சதுர்த்தி பூஜைக்குத் தேவையான களிமண் விநாயகர் சிலைகள் ரூ.150 முதல் ரூ.700 வரையும், சிலைக்கான குடை ரூ.10, தேங்காய் ரூ.20, கம்பு கதிர் ரூ.5, தோரணக்கட்டு ரூ.10, வாழை இலை ரூ.5, திருஷ்டி பூசணிக்காய் ரூ.50, மக்காச்சோளக் கதிர் ரூ.10, அருகம்புல் ஒரு கட்டு ரூ.50, மாவிலைக் கொத்து ரூ.10, துளசிக் கொத்து ரூ.10, இரு வாழைக் கன்று ரூ.50, எருக்கம்பூ மாலை ரூ.20, சாமந்திப்பூ (ஒரு முழம்) ரூ.10, கதம்பம் ரூ.25, மல்லிப்பூ ரூ.10, கனகாம்பரம் ரூ.25, ஆப்பிள் (கிலோ) ரூ.100, சாத்துக்குடி ரூ.40, விளாம்பழம் ரூ.50, பேரிக்காய் ரூ.50, ஒரு சீப்பு வாழைப்பழம் ரூ.70, கரும்புகள் 20 கொண்ட கட்டு ரூ.250, தனி கரும்பு ரூ.40, ஒரு படி பொரி ரூ.10, நாட்டு சர்க்கரை கிலோ ரூ.120, உடைத்த கடலை, அவல், நாட்டு சர்க்கரை, பொரி ஆகியவை கொண்ட தொகுப்பு ரூ.30 என விற்பனை செய்யப்படுகிறது. இதை ஏராளமான பொதுமக்கள் வாங்கிச் செல்கின்றனர்.

கரும்பு விலை உயர்வு

கரும்பு விற்பனை குறித்து மதுரை வியாபாரி செல்வம் கூறும்போது, ‘‘ரூ.7 லட்சம் முதலீடு செய்து கரும்புகளை மதுரையில் இருந்து கொண்டு வந்திருக்கிறோம். 20 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு கடந்த ஆண்டு ரூ.100-க்கு விற்கப்பட்டது. இந்த ஆண்டு ரூ.250 வரை விற்கிறோம். இந்த ஆண்டு நல்ல வியாபாரம் நடைபெறும் என நினைக்கிறேன்’’ என்றார்.

சந்தைக்கு வந்திருந்த அரும் பாக்கத்தை சேர்ந்த வனிதா கூறும்போது, ‘‘இதுபோன்ற சந்தைகள் நடத்தப்படுவதால், எல்லா வகையான பொருட்களும் ஒரே இடத்தில் கிடைக்கின்றன. விலையும் குறைவாக உள்ளது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x