மின்சாரம், மோட்டார் இல்லாமல் சென்னை முழுவதும் குடிநீர் விநியோகம்: ஆங்கிலேயர் கட்டிய பொறியியல் அதிசயம்

மின்சாரம், மோட்டார் இல்லாமல் சென்னை முழுவதும் குடிநீர் விநியோகம்: ஆங்கிலேயர் கட்டிய பொறியியல் அதிசயம்
Updated on
2 min read

கடந்த நூற்றாண்டில் கிணறுகளை நம்பியே குடிநீர் விநியோகம் இருந்தது. அதேவேளையில், 150 ஆண்டுகளுக்கு முன்பே முறைப்படுத்தப்பட்ட குடிநீர் விநியோகம் செய்யும் அளவுக்கு சென்னை நகரம் பரபரப்பாக இருந்துள்ளது.

1870-களில் மக்கள்தொகை அதிகரிப்பால் சென்னைவாசி களுக்கு சீரான குடிநீர் கொடுக்க வேண்டிய கட்டாயம் ஆங்கிலேயர்களுக்கு ஏற்பட்டது. இதற்கு விடைகாண அப்போதைய மெட்ராஸ் முனிசிபல் கார்ப் பரேஷனின் தலைமை பொறி யாளர் ஜேம்ஸ் பிரேஸர் என் பவரை ஆங்கிலேய அரசு நியமித்தது.

கொசஸ்தலை ஆற்று நீரைச் சென்னையில் விநியோகிக்க முடிவு செய்த அவர், 1871-ம் ஆண்டில் தாமரைப்பாக்கத்தில் அணைக்கட்டு ஒன்றைக் கட்டினார். அங்கி ருந்து சோழவரம் ஏரிக்கு நீர் கொண்டுவரவும், சோழவரத்தில் இருந்து செங்குன்றம் ஏரிக்கு நீர் கொண்டுவரவும் கால்வாய்கள் அமைக்கப்பட்டன.

செங்குன்றத்தில் இருந்து கீழ்ப்பாக்கம் நீருந்து நிலையத் துக்கும் கால்வாய் கட்டப்பட்டது. இந்த கால்வாய்கள் அனைத்தும் புவியீர்ப்பு விசையின் மூலம் தண்ணீரை இயல்பாக கொண்டு வருமாறு அமைக்கப்பட்டன. தற்போது வரை இந்த அமைப்பின் மூலமே செங்குன்றம் ஏரி தண்ணீர், கீழ்ப்பாக்கத்துக்கு வருகிறது.

பொறியியல் அதிசயம்

இவ்வாறு புவியீர்ப்பு விசையின் மூலம் சென்னைக்கு கொண்டுவரப்பட்ட குடிநீரை நகரம் முழுவதும் விநியோகிக்க பிரேஸர் கட்டிய அதிசயம் (நீருந்து நிலையம்) இன்றுவரை கீழ்ப்பாக்கத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

மின்சாரம், மோட்டார் போன் றவை இல்லாத அந்த காலத் திலேயே சென்னை முழுவதும் அந்த நீருந்து அமைப்பு மூலம் சீராக குடிநீர் விநியோகம் செய்துள்ளனர் என்பது பிரமிக்க வைக்கிறது.

தண்ணீரை உருண்டை வடிவ தொட்டி போன்ற அமைப்பில் (ஷாஃப்ட்) நிரப்பி, அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளனர். பின்னர் அழுத்தம் காரணமாக அதிக விசையுடன் மேலே வரும் குடிநீர், சென்னை முழுவதும் இரும்பு குழாய்களில் சென்றுள்ளது.

82 ஆண்டுகளாக..

அதன் பின்னர் 1914-ம் ஆண்டு நீராவி எஞ்சின் வந்தவுடன் அதன்மூலம் நீரை உந்தி வெளியேற்றியுள்ளனர். அது மட்டுமல்லாமல் குடிநீரைச் சுத்திகரிக்கும் உத்தியையும் கையாண்டுள்ளனர்.

பின்னர் உலகம் முழுவதும் மின்சாரம் பரவலாக்கப்பட்ட பிறகு 3 பெரிய மின் மோட்டார்களை 1935-ல் ஆங்கிலேயர் நிறுவினர். லண்டன் மாத்தர் அண்டு பிளாட் நிறுவனத்தின் அந்த மோட்டார்கள் 82 ஆண்டுகள் கடந்தும் இன்றும் செயல்பட்டு வருகின்றன. இவை தவிர அண்மையில் வாங்கப்பட்ட மோட்டார்களையும் சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் பயன்படுத்தி வருகிறது.

82 ஆண்டுகள் கடந்தும் செயல்பட்டுவரும் மின்சார மோட்டார்கள்.

நினைவுச் சின்னமாக பராமரிப்பு

சென்னை குடிநீர் விநியோகத் தின் பரிணாம வளர்ச்சியை பறைசாற்றும் இந்த ஷாஃப்ட், தற்போது பயன்பாட்டில் இல்லை. ஆனாலும் அதை ஒரு நினைவுச் சின்னமாக குடிநீர் வாரியம் பரா மரித்து வருகிறது. அது மட்டு மல்லாமல், அப்போது பயன்படுத் தப்பட்ட இரும்பு குழாய் ஒன்றும் பராமரிக்கப்பட்டு வருகிறது.

தற்போது அந்த இடத்தில் குடிநீர் வால்வுகள் இருப்பதால் பாதுகாக்கப்பட்ட பகுதியாக உள்ளது. அதேவேளையில் இந்த நீருந்து அமைப்பு தொடர்பான (ஷாஃப்ட்) ஆவணங்கள் கிடைக்கப்பெறவில்லை. இது செயல்பட்ட விதம், இதன் பின்னால் உள்ள பொறியியல் அறிவியல் ஆகியவற்றை ஆய்வு செய்வது, பல சிக்கலான பிரச்சினைகளுக்கு எளிமையான தீர்வு காண உதவும் என்பதில் ஐயமில்லை.

ஜேம்ஸ் பிரேஸரால் கட்டப்பட்ட மின்சாரம், மோட்டார் இல்லாத நீருந்து அமைப்பு (அடுத்த படம்) ஜேம்ஸ் பிரேஸரால் கட்டப்பட்ட மின்சாரம், மோட்டார் இல்லாத நீருந்து அமைப்பு. நினைவுச் சின்னமாக பாதுகாக்கப்படும் இரும்புக் குழாய்கள். (கடைசி படம்) 82 ஆண்டுகள் கடந்தும் செயல்பட்டுவரும் மின்சார மோட்டார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in