

மதுரையில் நாளிதழ் அலுவலகம் எரிப்பு வழக்கில் மலேசியாவில் தலைமறைவாக உள்ள அட்டாக் பாண்டியின் கூட்டாளி மீது காலக் கெடு குறிப்பிடாமல் பிடிவாரண்ட் பிறப்பிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற கிளையில் சிபிஐ வலியுறுத்தி உள்ளது.
மதுரையில் நாளிதழ் அலுவல கம் ஒன்றில் கடந்த 9.5.2007-ல் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் 3 பேர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் போலீஸாரால் கைது செய்யப்பட்ட அட்டாக் பாண்டி உட்பட 17 பேரை மதுரை சிபிஐ நீதிமன்றம் 2009-ல் விடுதலை செய்தது. இதை எதிர்த்து உயர் நீதிமன்ற கிளையில் மேல்முறை யீடு மனுக்கள் தாக்கல் செய் யப்பட்டன.
இந்த மனுக்கள் மீதான விசாரணையை இழுத்தடித்ததால் அட்டாக் பாண்டியின் கூட்டாளிகள் 12 பேருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இவர்களில் 10 பேர் கைது செய்யப்பட்டனர். தயாமுத்து, திருமுருகன் என்ற காட்டுவாசி முருகன் ஆகியோர் ஓராண்டுக்கும் மேலாக தலை மறைவாக உள்ளனர். இவர்களில் தயாமுத்து மலேசியாவில் தலை மறைவாக உள்ளார் என்று கூறப்படுகிறது.
இந்த வழக்கு நீதிபதிகள் ஏ.செல்வம், என்.ஆதிநாதன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கறிஞர்கள் நீதிமன் றப் புறக்கணிப்புப் போராட்டம் காரணமாக அட்டாக் பாண்டி உள்ளிட்டோரின் வழக்கறிஞர்கள் ஆஜராகவில்லை.
சிபிஐ சிறப்பு வழக்கறிஞர் மோகன் வாதிடும்போது, “மலேசி யாவில் தலைமறைவாக உள்ள தயாமுத்துவை தேடப்படும் குற்ற வாளியாக அறிவிக்க உள்ளோம். இதனால் அவருக்கு எதிராகக் காலக்கெடு எதுவும் குறிப்பிடாமல் பிடிவாரண்ட் (ஓபன் வாரண்ட்) பிறப்பிக்க வேண்டும். இது தொடர்பாக மனு தாக்கல் செய்துள்ளோம்.
அதற்கு பிரதான வழக்கு எண் வழங்கப்படவில்லை. இதனால் விசாரணைக்கு வராமல் உள்ளது” என்றனர். இதையடுத்து, விசாரணையை வரும் 24-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.