

தமிழகத்தில் அடுத்த 3 நாட் களுக்கு வெப்பத்தின் தாக்கம் சற்று குறைவாகவே இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் இன்று தொடங்கி, 28-ம் தேதி வரை நீடிக் கிறது. இந்த காலகட்டத்தில் இயல் பாக வெப்பத்தின் தாக்கம் அதிக மாக இருக்கும். கடந்த ஏப்ரல் மாதத் திலேயே அதிக வெயில் வாட்டி வந்த நிலையில் கத்திரி வெயி லின் போது மேலும் வெப்பம் அதிகரிக்கும் என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் நிலவி வருகிறது.
மக்களின் அச்சத்தை போக்கும் விதமாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலசந்திரன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
ஏப்ரல் மாதத்தில் பல நகரங் களில் இயல்பை விட 6 டிகிரி செல் சியஸ் வரை வெப்பம் அதிகரித்து இருந்தது. தற்போது தமிழகத்தின் கடற்கரையை ஒட்டியுள்ள பகுதி களில் தெற்கு மற்றும் தென் கிழக்கு திசையில் இருந்து காற்று வீசிக்கொண்டு இருக்கிறது. உள் மாவட்டங்களை பொறுத்தவரை யில் மேற்கு திசை காற்றின் வேகம் குறைந்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் கடற்கரையை ஒட்டியுள்ள பகுதியில் இயல்பை விட 2 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை குறைந்துள்ளது. உள் மாவட்டங்களில் இயல்பை விட 2 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்துள்ளது. இதே நிலை அடுத்து வரும் 3 நாட்களுக்கு தொடரும்.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. செங்கோட்டை, பேச்சிப்பாறை ஆகிய பகுதி களில் தலா 6 செமீ, ஆயக்குடி, கொடைக்கானல், வத்திராயிருப்பு, சேலம், பெனுகொண்டபுரம், தென்காசி ஆகிய பகுதிகளில் தலா 3 செமீ மழை பெய்துள்ளது. அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தின் உள் மாவட்டங்களில் கோடை மழை பெய்யக்கூடும். சென்னையில் அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.