Published : 12 Jul 2016 08:18 AM
Last Updated : 12 Jul 2016 08:18 AM

இன்றும், நாளையும் நடைபெறுவதாக இருந்த வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் வாபஸ்: அகில இந்திய வங்கி ஊழியர் கூட்டமைப்பு அறிவிப்பு

இன்றும், நாளையும் நடைபெறுவ தாக இருந்த வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

வங்கிகளை தனியார் மயமாக்கக் கூடாது, பாரத ஸ்டேட் வங்கியுடன் அதன் துணை வங்கிகளை இணைக்கக் கூடாது மற்றும் வாராக் கடனாக நிலுவையில் உள்ள ரூ.13 லட்சம் கோடியை உடனடியாக வசூலிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 12, 13-ம் (இன்றும், நாளையும்) தேதிகளில் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அகில இந்திய வங்கி ஊழியர் கூட்டமைப்பு அறிவித்தது.

இதையடுத்து, டெல்லியில் இருதினங்களுக்கு முன்பு மத்திய தொழிலாளர் நல ஆணையர் முன்னிலையில் தொழிற்சங்க நிர்வாகிகள், மத்திய நிதியமைச்சக அதிகாரிகள், வங்கி நிர்வாகங்கள் பங்கேற்ற முத்தரப்பு பேச்சு வார்த்தை நடைபெற்றது.

ஆனால், இப்பேச்சுவார்த்தை யில் எவ்வித உடன்பாடும் ஏற்படாததையடுத்து தோல்வியில் முடிவடைந்தது.

இதையடுத்து, அனைத்து வங்கி ஊழியர்கள் திட்டமிட்டபடி இன்றும்(12-ம் தேதி), நாளையும் (13-ம் தேதி) வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தனர். இன்று நடைபெறும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் பாரத ஸ்டேட் வங்கியின் ஐந்து துணை வங்கிகளை சேர்ந்த 45 ஆயிரம் ஊழியர்களும், நாளை நடைபெறும் போராட்டத்தில் அனைத்து இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம், அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கத்தைச் சேர்ந்த சுமார் 3 லட்சம் பேர் பங்கேற்பதாகவும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், வேலை நிறுத்தத்துக்கு டெல்லி உயர் நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

இதையடுத்து, வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ள தாக வங்கி ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x