Last Updated : 06 Mar, 2014 12:00 AM

 

Published : 06 Mar 2014 12:00 AM
Last Updated : 06 Mar 2014 12:00 AM

சென்னை உயர்நிலைப் பள்ளிகளிலும் விரைவில் கண்காணிப்பு கேமரா- மாணவர் பாதுகாப்புக்காக மாநகராட்சி முடிவு

சென்னை மாநகராட்சி உயர் நிலைப் பள்ளிகளில் வரும் கல்வி யாண்டு முதல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.

மாணவர்களின் பாதுகாப்பு கருதி சென்னை மாநகராட்சி உயர் நிலைப் பள்ளிகளில் வரும் கல்வி யாண்டு முதல் சிசிடிவி கேம ராக்கள் பொருத்தப்பட உள்ளன. 32 மேல்நிலைப்பள்ளிகளில் ஏற் கெனவே 20 பள்ளிகளில் கேமராக் கள் பொருத்தப்பட்டு உள்ளன.

இனி மீதமுள்ள 12 மேல் நிலைப்பள்ளிகளிலும் மற்றும் அனைத்து உயர்நிலைப்பள்ளி களிலும் கேமராக்கள் பொருத் தப்பட உள்ளன.

சமூக விரோதிகளால் பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன. எனவே அவர்கள் பள்ளிக்குள் நுழையாமல் இருக்கவும் மாண வர்கள் வெளியே செல்லாமல் இருக்கவும்தான் கேமராக்கள் பொருத்தப்படுகின்றன என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரி வித்தனர்.

மாணவர் கடத்தல் தடுக்கப்படும்

196-வது வார்டு உறுப்பினர் அண்ணாமலை கூறுகையில், ‘‘கேமராக்கள் பொருத்துவது பாது காப்பான உணர்வை ஏற்படுத்தும். பள்ளிகளில் இருந்து குழந்தைகள் கடத்தப்படுவதை இதன்மூலம் தடுக்க முடியும்’’ என்றார்.

முதலில் அடிப்படை வசதிகள்

இது தேவையற்ற கண்கா ணிப்பு முறை. முதலில் அடிப் படை வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என்கின்றன மாணவர் சங்கங்கள். இதுகுறித்து புரட்சிகர மாணவர் இயக்கத்தின் சென்னை மாவட்டச் செயலாளர் மருது கூறுகையில், “பணக்கார வீட்டுப் பிள்ளைகள்தான் அதிகம் பள்ளி யில் இருந்து கடத்தப்படுகின் றனர்.

அடிப்படை வசதிகளை செய்து தராமல் கேமராக்கள் பொருத்துவது போராடும் மாண வர்களை கண்காணிக்கத்தான். பெரம்பூர் மார்க்கெட் தெருவில் 1643 பெண்கள் பயிலும் மேல் நிலைப் பள்ளியில் குடிநீர் வசதி யில்லை. ஆனால் கேமரா இருக்கிறது.

இதுபோன்ற அடிப்படை வசதிகள் இல்லாத பள்ளிகளில் மாணவர்கள் பள்ளிக்கு வெளியே செல்ல வேண்டிய அவசிய முள்ளது’’ என்றார்.

தவறாக பயன்படுத்த வாய்ப்பு

இதுகுறித்து இந்திய மாணவர் சங்கத்தின் தென்சென்னை மாவட்ட தலைவர் நிருபன் கூறு கையில், “கேமரா மூலம் கண் காணித்து, மாணவ மாணவியர் இயல்பாக பேசிக் கொள்வதை தவறாக புரிந்து கொள்வதாகவும் பெண் ஆசிரியர்களை ஆண் ஆசிரியர்கள் தகாத முறையில் பார்ப்பதாகவும் புகார்கள் எங் களுக்கு வருகின்றன.

பாதுகாப்பை ஏற்படுத்துவதை விட, பெண்ணை எப்போதும் சந்தேகக் கண்ணோடு பார்ப்பவர் களுக்கே கேமரா அதிகம் பயன் படுகிறது’’ என்றார்.

கேமரா வைத்தால் தவறு இழைக்கும் மாணவர்களை கண்டு பிடிக்க உதவும். அதே நேரம் மாண வர்களின் சுதந்திரம் பறிபோகும் அபாயமும் உள்ளது என்று மாநகராட்சிப் பள்ளி மாணவர் ஒருவரது தாய் செல்வி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x