Published : 09 Jan 2017 08:22 AM
Last Updated : 09 Jan 2017 08:22 AM

குழந்தைகள் ஆரோக்கியமாக வளர சிறுதானிய உணவுகள் அவசியம்: ‘பெண் இன்று’ விழாவில் செஃப் தாமு வலியுறுத்தல்

‘குழந்தைகள் ஆரோக்கியமாக வளர சிறுதானிய உணவுகளை அதிக அளவில் கொடுக்க வேண்டும்’ என பெற்றோர்களை செஃப் தாமு கேட்டுக்கொண்டார்.

தமிழகத்தின் முக்கிய நகரங்களில் ‘தி இந்து’ வாசகர் திருவிழா வெகுசிறப்பாக நடை பெற்று வருகிறது. இதேபோன்று, ‘தி இந்து’ நாளிதழின் இணைப்பிதழாக ஞாயிறுதோறும் வெளியாகும் ‘பெண் இன்று’ சார்பில் மகளிர் திருவிழா நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் நெய்வேலியைத் தொடர்ந்து நேற்று மதுரை அழகர் கோவில் சாலையில் உள்ள சமூக அறிவியல் கல்லூரியில் அசத்தலான போட்டிகள், அட்டகாசமான பரிசுகளுடன் மகளிர் திருவிழா நடந்தது.

வேலம்மாள் கல்விக் குழுமத் தின் அறங்காவலர் எம்.குஞ்சர வள்ளி, சமூக அறிவியல் கல்லூரி துணைத் தலைவர் ஆர்.பாமாராஜா ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி விழாவைத் தொடங்கி வைத்தனர். இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற செஃப் தாமு பேசிய தாவது:

சமையல் ஒரு கலை. பாரம் பரியமான உணவுகளை அதிக அளவில் சாப்பிட வேண்டும். குழந்தைகளுக்கு சிறுதானிய உணவுகளை அதிக அளவில் கொடுக்க வேண்டும். ஜங் உணவுகள் குழந்தைகளுக்கு கேடு விளைவிக்கும்.

ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்

அம்மாக்கள் குழந்தைகளுக்கு பிடிக்கும் உணவைச் சமைத்துக் கொடுத்து பாரம்பரியத்தை காப்பாற்ற வேண்டும். அம்மாக் கள் கையால் சமைத்து கொடுக் கும்போது குழந்தைகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மாதம் ஒருமுறை ஹோட்டலுக்கு செல்வதாக மட்டும் இருக்க வேண்டும்.

கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் உணவுக் கட்டுப்பாடு என்கிற பெயரில் சரியாக சாப்பிடாமல் இருந்து வருகின்றனர். இது அவர்களது உடல் நலத்தைக் கெடுக்கும். நன்கு சாப்பிட்டால் மட்டுமே உடலுக்குத் தேவையான சக்தி கிடைக்கும். ‘டயட்’ என்கிற பெயரில் சரியாக சாப்பிடாமல் இருப்பவர்கள் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். காலை கண்டிப்பாக சாப்பிட வேண்டும்.

பொதுவாக சமையல் நன்றாக வரவில்லை என்பது பலரின் ஆதங்கமாக உள்ளது. குழந்தை களைப் பள்ளிக்கு அனுப்புவது போன்ற வேலையுடன், விரக்தி யுடன் சமையல் செய்யும்போது ருசியாக இருக்காது. சமைக்கும் போது நல்ல எண்ணங்களுடன் செய்ய வேண்டும். இதை சாப்பிடு பவர்கள் தனது பெற்றோர், கணவர், குழந்தைகள் என நினைத்து சமைக்க வேண்டும். முக்கியமாக சமையலில் அன்பு, பாசத்தைச் செலுத்த வேண்டும்.

முன்பெல்லாம் கூட்டுக் குடும்பங்களில் கூட்டமாக இருந்து சாப்பிட்டோம். இப்போது அந்த ஆரோக்கியமான சூழல் இல்லை. தினமும் ஒருவேளை, அதாவது இரவிலாவது குழந்தைகளுடன் அமர்ந்து அவர்களது அனுபவங் களைப் பகிர்ந்து கொண்டு சாப்பிடு வது உடலுக்கு ஆரோக்கியம் தரும்.

சமையலுக்கும், பாத்திரத்துக் கும் நகமும், சதையுமான தொடர்பு உள்ளது. பாத்திரம் சரியாக இருந்தால் தான் சமையல் சரியாக இருக்கும். மண் சட்டிக்கு இருக்கும் மகத்துவம் எந்த பாத்திரத்துக்கும் வராது. மண் சட்டியை பயன்படுத்தி சமையல் செய்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். குக்கரில் சமைப்பதைக் காட்டிலும் வடித்து சமையல் செய்வது நலம் என்றார்.

பெற்றோர்தான் ரோல்மாடல்

உளவியல் மருத்துவர் ஷர்மிளா பாலகுரு பேசியதாவது: ‘டீன் ஏஜ்’ குழந்தைகளின் நல்லது, கெட்டது எல்லாம் பெற்றோர்களை சார்ந்தே இருக்கிறது. டீன் ஏஜ் குழந்தைகள் மற்றவர்களுக்கு மரியாதை கொடுப்பது குறைவாக இருக்கிறது. எதற்கெடுத்தாலும் வாக்குவாதம் செய்கின்றனர். இதனால், பெற்றோர்களுக்கு குழந்தைகள் மீது கோபமும், எரிச்சலும் ஏற்படுகிறது. டீன் ஏஜ் குழந்தைகள் தனிமையை விரும்புவர். அதிலும் பெண் குழுந்தைகள், சில விஷயங்களை வெளியே சொல்ல முடியாமல் அழுவார்கள்.

இந்த வயதில் குழந்தைகளிடம் மறதி, கவனக் குறைவு நிறையவே இருக்கும். தலைவலி, வயிற்று வலி காரணம் சொல்வார்கள். சில குழந்தைகள், சினிமா, டிவி, லேப்டாப், செல்போன் போன்ற பொழுதுபோக்குகள்தான் உலகமே என சுற்றித்திரிந்து கொண்டு இருப்பார்கள்.

இவர்களை எப்படி மாற்றுவது எனப் பெற்றோர் கவலைப்படக் கூடாது. முதலில் அவர்களை புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். பிள்ளைகளுக்கு பெற்றோர்தான் முதலில் ரோல் மாடலாக இருக்க வேண்டும்.

குழந்தைகளிடம் நாம் எதை எதிர்பார்க்கிறோமோ அதுபோல நாம் 100 சதவீதம் இருக்க வேண்டும். பேச்சு, அன்றாடப் பழக்கங்கள், உணவுப் பழக்கம், படிப்பு எல்வாற்றிலும் நம்முடைய நடவடிக்கைகளில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். பிள்ளை களிடம் நாம் அதிகம் மனம்விட்டுப் பேச வேண்டும். அவர்கள் பேச வரும்போது அன்பாக, பொறுமை யாக அவர்கள் பேசுவதை கவனமுடன் கேட்க வேண்டும்.

நண்பர்களாக பழக வேண்டும்

குழந்தைகள் பேசும்போது லேப்டாப், டிவி, செல்போன்களில் கவனத்தை வைத்துக்கொண்டு கடமைக்கு நாம் பேசக்கூடாது. நண்பர்களாகப் பாவித்துப் பழக வேண்டும். நேரம் தவறாமை, தனி மனித ஒழுக்கம், அன்பாகப் பேசுவது, அரவணைத்து செல்வதில் பிள்ளைகளுக்கு ரோல் மாடலாக பெற்றோர் இருக்க வேண்டும். பெண் குழந்தைகளுக்கு நல்லது எது, கெட்டது எது என்பதை சொல்லிக் கொடுக்க வேண்டும். இதைத் தொடர்ந்து சின்னத் திரை சீரியல்கள் குடும்பங்களைச் சீரழிக்கிறதா?, சீர்படுத்துகிறதா? என்ற தலைப்பில் பேச்சரங்கம் நடைபெற்றது. இதற்கு ஏ.ரேணுகா தேவி நடுவராக இருந்தார். பேச்சாளர்கள் முனைவர் சங்கீத் ராதா, பேராசிரியர் நாகபுஷ்பம் பங்கேற்று பேசினர்.

கோலப்போட்டி, இட்லி சாப்பிடும் போட்டி, சைகை நாடகம், விநாடி-வினா எனப் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.

மதுரை பாட்ஷாவின் வந்தேமாதரம் நடனக் குழுவினரின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. மதிய உணவு அரங்கிலேயே வழங்கப்பட்டது. மாலை 5 மணி வரை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சின்னத்திரை தொகுப்பாளினி தேவி கிருபா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

விழாவை `தி இந்து’ நாளிதழுடன் மதுரை சமூக அறிவியல் கல்லூரி, திருமங்கலம் அன்னை பாத்திமா கேட்டரிங் மற்றும் கலை, அறிவியல் கல்லூரி இணைந்து நடத்தின. லலிதா ஜூவல்லரி, தி சென்னை சில்க்ஸ், தி சிட்டி கேப்ஸ், தங்கமயில் ஜூவல்லரி, கரூர் ஹெச் டூ ஹெச் ஆரஞ்ச் இம்பெக்ஸ், பொன்மணி வெட்கிரைண்டர், மை டிரீம்ஸ், சுப்ரீம் மொபைல்ஸ், அண்ணாச்சி விலாஸ் இட்லி மாவு, விஎல்சிசி அழகு மற்றும் பிட்னெஸ் சென்டர், அஞ்சலி நல்லெண்ணெய், ஓம் முருகா பட்டு மஹால், அனிதா ஸ்டோர்ஸ், ஹோட்டல் தி மெட்ரோபோல், ஹேமா கண்ணன் பிராண்ட் புட்ஸ், கண்ணன் காபி ஆகிய நிறுவனங்கள் ஏராளமான பரிசுகளை வழங்கி கொண்டாட்டத்தில் பங்கேற்றன.

சிந்தனையை தூண்டும் செய்திகள்

`தி இந்து’ தமிழ் நாளிதழின் இணைப்பிதழ் பகுதி ஆசிரியர் டி.ஐ.அரவிந்தன் பேசியதாவது: வழக்கமான செய்திகளாக அல்லாமல் `தி இந்து’ தமிழ் நாளிதழில் அதன் பின்னணி குறித்த தகவல்களும் வெளியிடப்படுகின்றன. மக்களின் வாழ்க்கைக்குப் பயன்படும் செய்திகள் அதிகம் இடம் பெறுகின்றன. அபசகுணமான செய்திகள், அதிர்ச்சியான செய்திகளை வெளியிடுவது இல்லை. சமூக அக்கறையுடன் குறிப்பாக பெண்கள், குழந்தைகளுக்கான இணைப்பிதழ்களில் அதிக கட்டுரைகள் வெளியிடப்படுகின்றன. பொழுதுபோக்கு மட்டுமின்றி வாசகர்களின் சிந்தனையைத் தூண்டும் வகையிலான செய்திகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

அத்துடன் பெண் சாதனையாளர்களை ஊக்கப்படுத்தும் வகையிலான செய்திகள், பெண்களுக்கான உரிமைகள் குறித்த தகவல்கள், உளவியல் மற்றும் சட்டரீதியான தகவல்களும் வெளியிடப்படுகின்றன. உலகத்தைப் பெண்களுக்கும், பெண்களை உலகத்துக்கும் அறிமுகப்படுத்தும் பாலமாக உள்ளது ‘பெண் இன்று’ இணைப்பிதழ் என்றார்.

இது என் வீட்டு விழா

விழா அரங்குக்கு முன்கூட்டியே வந்து வாசலில் மலர்களால் கோலமிட்டு, குத்துவிளக்கை பூக்களால் அலங்கரித்து தனது வீட்டு விழாவைப்போல ஒவ்வொரு பணியையும் ஆர்வத்துடன் முன்வந்து செய்தார் மதுரை எல்லீஸ் நகரைச் சேர்ந்த முருகபூபதி என்பவரது மனைவியும் ஓய்வுபெற்ற ஆசிரியையுமான விஜயலட்சுமி(69).

இதுகுறித்து அவர் கூறியதாவது: ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் தொடங்கப்பட்ட முதல் நாளில் இருந்து வாசிக்கிறேன். கடந்த ஆண்டு மதுரையில் நடந்த விழாவில் கலந்து கொண்டு என்னால் முடிந்த பணிகளைச் செய்தேன். இந்த விழாவை எனது வீட்டு விழாவைப்போல மகிழ்ச்சியாக உணர்கிறேன் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x