

பராமரிப்பு பணிகளுக்காக சுமார் 65 மாநகர ஏசி பேருந்துகள் பணி மனைகளில் நிறுத்தி வைக்கப்பட் டுள்ளன. இதனால், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
மாநகர போக்குவரத்து கழகத் தில் தாம்பரம், பிராட்வே, கோவளம், வண்டலூர், கேளம்பாக் கம், தியாகராயநகர், மாமல்லபுரம், காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிக ளுக்கு 100 ஏசி பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. வழக்கமாக மழை காலங்களில் ஏசி பேருந்துகள் முழு அளவில் இயக்கப்படாது. வெயில் காலத்தில் ஒட்டுமொத்த ஏசி பேருந்துகளும் முழுமையாக பராமரிக்கப்பட்டு இயக்கப்படுவது வழக்கம்.
ஆனால், இந்த ஆண்டில் சுமார் 65 ஏசி பேருந்துகள் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள ஆங் காங்கே உள்ள பணிமனைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால், பொதுமக்கள் அவதிப் படுகின்றனர்.
இதுதொடர்பாக பயணிகள் சிலர் கூறும்போது, ‘‘வெயில் காலத்தில் ஏசி பேருந்துகள் வழக்கமாக இயக்கப்படும். கோவளம், மாமல்லபுரம், வண் டலூர் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று வர இந்த பேருந்துகள் பயனுள்ளதாக இருந்தன.
ஆனால், தற்போது, ஏசி பேருந்துகளின் சேவையை பார்க்க முடியவில்லை. எனவே, ஏசி பேருந்துகளை பராமரித்து இயக்கினால், வெயில் காலத்தில் மக்கள் அதிகளவில் பயணம் மேற்கொள்வார்கள்’’ என்றனர்.
இது தொடர்பாக மாநகர போக்குவரத்து கழக அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘60-க்கும் மேற்பட்ட மாநகர ஏசி பேருந்து கள் பராமரிப்பு பணிக்காக பணிமனைகளில் நிறுத்தப்பட்டுள் ளன. இதற்கான நிதி கிடைத் தவுடன் பராமரிப்பு பணிகள் மேற் கொள்ளப்பட்டு ஏசி பேருந்துகள் இயக்கப்படும்’’ என்றார்.