Last Updated : 18 Jan, 2014 09:30 AM

 

Published : 18 Jan 2014 09:30 AM
Last Updated : 18 Jan 2014 09:30 AM

மருத்துவமனை வசதி இன்றி தவிக்கும் 30 ஆயிரம் பேர்

பெருங்குடியில் உள்ள கல்லுக்குட்டை பகுதியில் வசிக்கும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவமனை வசதியில்லாமல் அவதிப்படுகின்றனர்.

சென்னை பெருங்குடியில் உள்ள கல்லுக்குட்டை பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் கூட இல்லாததால் சரியான மருத்துவ வசதியின்றி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

சாதாரண நோயாக இருந்தாலும் பிரசவம், மாரடைப்பு, பாம்பு கடி போன்ற அவசர காரணங்களாக இருந்தாலும் வெகு தூரம் நடந்தோ, வண்டியிலோ செல்ல வேண்டிய நிலையில் அப்பகுதி மக்கள் உள்ளனர்.

அப்பகுதியில் சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதால் ஆட்டோக்கள் பல சமயங்களில் உட் புறப் பகுதிகளுக்கு வருவதில்லை. எனவே அவசர காலத்தில் மருத்துவ மனை சென்றடையும் வரை வாழ்வா சாவா என்ற நிலையே இருக்கிறது. இதுபற்றி அங்கு வசிக்கும் அறிவழகி என்பவர் கூறுகையில், “நாங்கள் அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டு மானால் துரைப்பாக்கம் வரை செல்லவேண்டும்.

இல்லையென்றால் ராயப் பேட்டை அல்லது சென்ட்ரல் செல்ல வேண்டும். அருகில் உள்ள தனியார் மருத்துவ மனைகளில் அதிக கட்டணம் வசூலிக்கின்றனர். அவசரத்துக்கு இங்கு வசிக்கும் ஆட்டோக்காரர்கள் உதவினால்தான் உண்டு.” என்றார்.

கல்லுக்குட்டையில் மழைக் காலத்தில் இடுப்பளவு தேங்கி நிற்கும் தண்ணீரில் பாம்புகள் உலாவி வருவதால் அப்பகுதியினர் அடிக்கடி பாம்பு கடிக்கு ஆளாகின் றனர்.

இதில் பலர் உயிரிழந்துள்ள னர். இதுபற்றி கல்லுக்குட்டை ஜே.ஜே.நகரில் வசிக்கும் சாந்தி என்பவர் கூறுகையில், “கடந்த வருடம் மழை பெய்தபோது எங்கள் பகுதியில் இடுப்புக்கு மேல் தண்ணீர் தேங்கியிருந்தது. அதில் நடந்து வந்தபோது பாம்பு என்னை கடித்துவிட்டது. அருகில் இருந்தவர்கள் என்னை அரசு பொது மருத்துவமனை கொண்டு சென்றனர். 15 நாட்கள் சிகிச்சைக்கு பிறகுதான் வீடு திரும்பினேன்,”என்றார்.

கல்லுக்குட்டைப் பகுதியைப் பற்றி ஆராய்ச்சி செய்துவரும் சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவன மாணவி தீபா கூறுகையில், “இப்பகுதியில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். ஆனால் இவர்களுக்கான மருத்துவ வசதி உள்ளிட்ட எந்த அடிப்படை வசதியும் கிட்டத்தட்ட 25 வருடங் களாக இல்லை,” என்றார்.

மருத்துவமனை அமைப்பது பற்றி மாநகராட்சி சுகாதார அதிகாரி யிடம் கேட்டபோது, “மத்திய அரசின் திட்டத்தின் கீழ் விரிவாக்கப்பட்ட பகுதிகளில் 40 மருத்துவமனைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி கல்லுக்குட்டைப் பகுதி அமைந்திருக்கும் 14-வது மண்டலத் தில் நான்கு மருத்துவமனைகள் அமைக்க திட்டமுள்ளது.

15000 பேருக்கு ஒரு மருத்துவ மனை என்ற அமைக்கப்படுவ தால் கல்லுக்குட்டையில் மக்கள் கணக்கெடுப்பு முடிந்த பிறகு ஏப்ரல் மாதம் முதல் நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படும்,” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x