

சென்னை துறைமுகம் ஒரே நாளில் 33 ஆயிரத்து 840 டன் அளவுள்ள சரக்குகளை கையாண்டு சாதனை படைத் துள்ளது. இதுதொடர்பாக சென்னை துறைமுகம் வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:
சென்னை துறைமுகத்துக்கு வெளிநாட்டில் இருந்து எம்.வி. குயிங் ஹுவா ஷான் என்ற கப்பல் மூலம் சுண்ணாம்புக் கல் வந்தது. 33 ஆயிரத்து 840 டன் எடையுள்ள இந்த சுண்ணாம்புக் கல், துறைமுகத்தில் உள்ள நகரும் கிரேன் மூலம் ஒரே நாளில் கப்பலில் இருந்து இறக்கப்பட்டது.
சென்னை துறைமுகத்தில் இதற்கு முன்பு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 16-ம் தேதி அதிகபட்சமாக ஒரே நாளில் 32 ஆயிரத்து 483 டன் அளவு சரக்குகள் கையாளப்பட்டன.
இந்நிலையில், கூடுதலாக ஆயிரத்து 357 டன் சரக்கை கையாண்டு சாதனை படைக் கப்பட்டுள்ளது. இந்தச் சாதனையை நிகழ்த்தியதற்காக சென்னை துறைமுக ஊழியர்கள் மற்றும் அதிகாரி களுக்கு துறைமுக தலைவர் பி.ரவீந்திரன் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது