Published : 25 Jun 2016 08:47 AM
Last Updated : 25 Jun 2016 08:47 AM

வங்கிகளின் ஜப்தி நடவடிக்கை: அமைச்சர் பேச்சுக்கு விவசாயிகள் கண்டனம்

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் விவசாயிகளிடம் ஜப்தி நடவடிக் கையில் ஈடுபடுவதைத் தடுக்க முடியாது என்ற அமைச்சர் செல் லூர் ராஜுவின் பேச்சுக்கு டெல்டா விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அனைத்து விவசாயி கள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழக சட்டப்பேரவையில் 2 தினங்களுக்கு முன் பேசிய கூட்டு றவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு, கூட்டுறவு வங்கிகளில் விவ சாயிகள் வாங்கிய கடனுக்கான ஜப்தி நடவடிக்கையை மட்டுமே தடுக்க முடியும். தேசியமயமாக் கப்பட்ட வங்கிகளின் ஜப்தி நடவடிக்கையைத் தடுக்க முடியாது என்று கூறியுள்ளார். அமைச்சரின் இந்தப் பேச்சு, விவசாயிகளுக்கு பெரும் அதிர்ச்சியாகவும், வருத்தம் அளிப்பதாகவும் உள்ளது.

மறைமுக ஊக்குவிப்பு

ஏற்கெனவே, விவசாயிகளைத் தாக்கியும், அவமானப்படுத்தியும், இயந்திரங்களைப் பறிமுதல் செய் தும் ஜப்தியில் ஈடுபடுகின்றனர். இதனால், விவசாயிகள் தற் கொலை செய்துகொள்வது அதிகரித்துள்ளது. இந்நிலையில், அமைச்சர் செல்லூர் ராஜு சட்டப் பேரவையில் இவ்வாறு பேசியது முறையல்ல. இந்தக் கருத்து, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளுக்குச் சாதகமாக அமைந்துவிடும். அமைச்சரின் பேச்சு, மறைமுகமாக ஜப்தி நடவடிக்கையை ஊக்கு விப்பதாகவும் அமையும்.

தமிழக விவசாயிகளின் நல னுக்கு நன்மை பயக்கும் திட்டங் களைச் செயல்படுத்தி வரும் முதல் வர் ஜெயலலிதாவுக்கு எதிராக வும் அமைச்சரின் கருத்து அமைந் துள்ளது. எனவே, அமைச்சர் தனது கருத்தைத் திரும்பப்பெற வேண்டும்.

ஜப்தி தொடர்பாக முதல்வர் உரிய விளக்கம் அளிக்க வேண்டும். விவசாயிகளிடம் பறிமுதல் செய்த இயந்திரங்களை திருப்பித் தர வேண்டும். தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன்கள் முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x