Published : 20 May 2017 10:04 AM
Last Updated : 20 May 2017 10:04 AM

காவலர் தேர்வு வயது வரம்பை தளர்த்தக் கோரி தலைமை செயலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற 6 பேர் கைது

காவலர் தேர்வுக்கான வயது உச்ச வரம்பை தளர்த்த வலியுறுத்தி தலைமை செயலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திய 6 இளைஞர்கள் திடீரென தீக்குளிக்க முயன்றனர். அவர்களை போலீஸார் கைது செய்தனர்.

தமிழகம் முழுவதும் 32 மாவட்டங்களில் 2-ம் நிலை காவலர்கள், தீயணைப்பு வீரர்களை தேர்வு செய்வதற்கான எழுத்து தேர்வு நாளை காலை நடக்க உள்ளது. 10,686 பேர் தேர்வு எழுத உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு பிறகு தேர்வு நடப்பதால் தேர்வர்கள் ஆர்வத்தோடு தயாராகி வருகின்றனர். இதற்கிடையில், தேர்வுக்கான வயது உச்ச வரம்பை தளர்த்தக் கோரி 50-க் கும் மேற்பட்டோர் நீதிமன்றத்தை அணுகியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், எழுத்து தேர்வு நெருங்கிவிட்டதால் தேர்வுக்கான வயது உச்ச வரம்பைத் தளர்த்த உடனே நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி 30-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சென்னை தலைமை செயலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் திருவண்ணாமலை மாவட்டம் பாண்டியன் (26), அமரன் (26), விழுப்புரம் மாவட்டம் சதீஷ் (27), நீலமேகம் (27), காஞ்சிபுரம் மாவட்டம் குணசேகரன் (27), வேலூர் மாவட்டம் சுரேஷ் (26) ஆகிய 6 பேர் தலைமை செயலகம் முன்பு நின்று தொடர்ந்து கோஷமிட்டனர்.

அப்போது, மறைவாக வைத் திருந்த மண்ணெண்ணெயை அவர்கள் திடீரென தலையில் ஊற்றிக்கொண்டு தீ வைத்துக் கொள்ள முயன்றனர். பாதுகாப் புக்காக நின்றிருந்த போலீஸார் ஓடிவந்து அவர்களைத் தடுத்து நிறுத்தினர். 6 பேரையும் கைது செய்து வடக்கு கடற்கரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x