

தமிழகத்தில் 32 மாவட்டங்களையும் கடுமையான வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவித்து, நிவாரணம் வழங்குவது தொடர் பான அரசாணை அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான 3 மாதங்களில் பெய்யும் வடகிழக்கு பருவமழை இந்தாண்டு 17 செ.மீ. அளவுக்கு மட்டுமே பெய்தது. இதனால், சென்னை உள்ளிட்ட 32 மாவட்டங்களும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன. விவசாயிகள் இறப்பு, பயிர் பாதிப்பை தொடர்ந்து, குடிநீர் தட்டுப்பாடும் ஏற்படும் நிலை உள்ளதால், வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என பல் வேறு தரப்பில் இருந்து தமிழக அரசுக்கு கோரிக்கை வந்தது.
இதையடுத்து, தமிழகம் முழு வதும் வறட்சி பாதிப்பு ஆய்வு செய்யப்பட்டது. சமீபத்தில் முதல் வர் ஓ.பன்னீர்செல்வம், சென்னை உட்பட 32 மாவட்டங்களையும் வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவித்தார்.
இந்நிலையில், வறட்சி மற் றும் நிவாரணம் தொடர்பாக வருவாய்த் துறையால் அர சாணை பிறப்பிக்கப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட்டு உள்ளது.
அதில், வறட்சி குறித்த ஆய்வு முடிவில், 16 ஆயிரத்து 682 வருவாய் கிராமங்களில், 13 ஆயி ரத்து 305 கிராமங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஆயிரத்து 584 கிராமங்களில் பயிர் நிலையை ஆய்வு செய்ததில், 87 சதவீதம் வரை நிலங்கள் வறட்சியால் பாதிக்கப் பட்டுள்ளன. இந்த வறட்சி நிலை வரும் மாதங்களில் மேலும் தீவிர மடையும். இதன் அடிப்படையில் 32 மாவட்டங்களும் வறட்சி யால் பாதிக்கப்பட்டதாக அறிவிக் கப்பட்டுள்ளது.
13 விதமான நிவாரணங்கள்
இதையடுத்து இந்த மாவட் டங்களுக்கு பாதிப்புகள் அடிப் படையில் 13 விதமான நிவார ணங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த நிவாரணங்களை வழங்கு வதை கண்காணிக்க, மாவட்டங் கள் தோறும் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ள னர். அவர்கள் மாதம் ஒருமுறை ஆய்வு செய்து மாதாந்திர அறிக் கையை பிப்ரவரியில் சமர்ப்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள் ளது.
மேலும் அரசிதழில் சென்னை, அரியலூர் உள்ளிட்ட 32 மாவட் டங்களும் கடுமையான வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த அறிவிப்பு ஜனவரி 10-ம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும், இது அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து 6 மாதம் அல்லது அரசால் வேறு அரசாணையின் மூலம் திரும்பப்பெறும் வரை நடைமுறையில் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இது தவிர, அறிவிப்பு வெளியிடப்பட்ட மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் நிவாரணப் பணி களை மேற்கொள்ள அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது.