40 தொகுதிகளிலும் வெற்றி பெற பாடுபடுங்கள் - திமுகவினருக்கு ஸ்டாலின் வேண்டுகோள்

40 தொகுதிகளிலும் வெற்றி பெற பாடுபடுங்கள் - திமுகவினருக்கு ஸ்டாலின் வேண்டுகோள்
Updated on
1 min read

நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற கடுமையாக பாடுபட வேண்டும் என்று திமுகவினரை மு.க.ஸ்டா லின் கேட்டுக் கொண்டார்.

செங்கல்பட்டு பொதுக் கூட்டத்தில் கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

திமுக ஆட்சியில் மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தினோம். பல அரிய திட்டங்கள் தீட்டப்பட்டன. ஆனால், அதிமுகவினர் ஆட்சிக்கு வந்ததும் அந்தத் திட்டங்களை கிடப்பில் போட்டுவிட்டனர். இலங்கைத் தமிழர்களுக்காக மத்திய அரசிடம் திமுக சார்பில் பல கோரிக்கைகள் வைக்கப்பட்டன. ஆனால், அதற்கு மத்திய அரசு செவிசாய்க்கவில்லை. தமிழர்களின் எண்ணம், உணர்வு களுக்கு எப்போதும் குரல் கொ டுக்கும் ஒரே இயக்கம் திமுகதான்.

தமிழகத்தில் தற்போது தினமும் கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதைத் தடுக்க ஆட்சியாளர்கள் நட வடிக்கை எடுக்கவில்லை. காஞ்சி புரம் மாவட்டத்தில் பல்வேறு அரசியல் கொலைகள் தொடர்ந்து நடக்கின்றன. இதைத் தடுக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறுவதற்கு தொண்டர்கள் கடுமையாக பாடுபடவேண்டும். கூட்டணி பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். அதை கருணாநிதி பார்த்துக்கொள்வார். நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக அரசுக்கு மக்கள் பாடம் புகட்டுவர்.

காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணியை திமுக முறித்துக் கொண்டது, இப்போது எடுத்த முடிவு அல்ல. மத்திய அரசில் இருந்து விலகும்போதே எடுத்த முடிவுதான் என்றார்.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in