

சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் ரயில் மறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைக் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்பட 300 பேர் கைது செய்யப்பட்டனர்.
காமன்வெல்த் கூட்டமைப்பில் இருந்து இலங்கையை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, விடுதலை சிறுத்தைக் கட்சியினர் மறியல் செய்தனர்.
இலங்கையில் நடைபெற்று வரும் காமன்வெல்த் மாநாட்டில், இந்தியா கலந்து கொண்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினர். சென்னையில், திருமாவளவன் உள்ளிட்டவர்கள் கைதானார்கள். மதுரை, நாமக்கல், விருதுநகர், தஞ்சை, ஈரோடு, கரூர் ஆகிய மாவட்டங்களிலும் மறியல் நடந்தது.