Published : 16 Mar 2017 08:30 AM
Last Updated : 16 Mar 2017 08:30 AM

ஜெயலலிதா மரணம் குறித்து அவதூறு: ஜாமீன் கோரி ராமசீதா மனு - போலீஸார் பதில் அளிக்க உத்தரவு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து அவதூறு பரப்பியதாக கைது செய்யப்பட்ட ஊட்டச்சத்து நிபுணர் ராம சீதா ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இதுதொடர்பாக போலீஸார் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அப்போலோ மருத்துவமனையில் அளிக்கப் பட்ட சிகிச்சை குறித்தும், அவரது மரணம் குறித்தும் அவ தூறு பரப்பியதாக, அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் தீபாவின் ஆதரவாளரான ஊட்டச் சத்து நிபுணர் ராமசீதா(52) கடந்த பிப்ரவரி 25-ல் கைது செய்யப் பட்டார். இந்நிலையில், தனக்கு ஜாமீன் கோரி ராமசீதா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:

புதிய கருத்து அல்ல

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நான் கூறிய கருத்துக்கள் ஒன்றும் புதியது அல்ல. ஏற்கெனவே அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக முகநூல் மற்றும் வாட்ஸ்-ஆப் போன்ற சமூக வலை தளங்களில் வெளிவந்ததைத்தான் நானும் பேசினேன். பல அரசியல் தலைவர்களும் மருத்துவமனை யின் சிகிச்சை முறை குறித்து சந்தேகம் எழுப்பியுள்ளனர். ஆனால் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.

அரசியல் களத்தைக் கவரும் வகையில்தான் இவ்வாறு கருத்து தெரிவித்தேன். இதை தீவிரமாக எடுத்துக்கொள்ள தேவையில்லை. சமூக வலைதளங்களில் உள்ள பதிவின் அடிப்படையிலேயே என்னைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.

ஆகவே எனக்கு ஜாமீன் அளிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார். இந்த மனு மீதான விசாரணை நேற்று நீதிபதி எஸ்.பாஸ்கரன் முன்பு வந்தது. அப்போது இதுகுறித்து போலீஸார் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை வரும் மார்ச் 20-க்கு தள்ளி வைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x