Published : 29 Mar 2014 12:00 AM
Last Updated : 29 Mar 2014 12:00 AM

18 பெண் தொழிலாளர்கள் சாலை விபத்தில் படுகாயம்: அரசுக்கு சிஐடியூ கண்டனம்

காஞ்சிபுரம் அருகே வாகனம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 18 பெண் தொழிலாளர்கள் காயமடைந்தனர்.

18 சித்தாள்கள் சிறிய சரக்கு வாகனத்தில் குன்றத்தூரில் இருந்து வியாழக்கிழமை காஞ்சிபுரத்துக்கு அமைப்புச்சாரா தொழிலாளர் நலவாரியத்தில் தங்களின் பதிவை புதுப்பிக்க வந்தனர். அந்தப் பணியை முடித்துக் கொண்டு ஊர் திரும்பும்போது, சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வாகனத்தின் டயர் வெடித்து வாகனம் கவிழ்ந்தது. இந்நிலையில் பின்னால் வந்த 2 கார்கள் சரக்கு வாகனத்தின் மீது மோதியதில், பயணம் செய்த 18 பேர் காயமடைந்தனர். அவர்கள் காஞ்சிபுரம் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் புஷ்பா, லோகம்மாள் ஆகியோர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 8 பேர் சிகிச்சை முடிந்து வியாழக்கிழமை இரவே வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். மீதம் உள்ள 8 பேர் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காஞ்சிபுரம் தாலுக்கா போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விபத்துகுறித்து சிஐடியூ மாவட்டச் செயலர் ஏ.முத்துகுமார் கூறியதாவது:

பழைய முறையில், அமைப்புச் சாரா நலவாரியத்தின் கீழ் பதிவு செய்தல், பதிவை புதுப்பித்தல் உள் ளிட்ட பல்வேறு பணிகளை தொழிற் சங்கங்களே மேற்கொண்டு வந்தன. இதனால் தொழிலாளர்களுக்கு சிரமம் இல்லாமல் இருந்தது. தற்போது புதிய விதிப்படி, தொழிற்சங்கங்கள் மேற்கொண்ட பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. அனைத்து பணிகளுக்கும் தொழிலாளர் நல அலுவலகத்துக்கு தொழிலாளர்கள் நேரடியாக வரவழைக்கப்படுகின்றனர். இதனால் தொழிலாளர் அலுவலகம் வந்து, திரும்பியபோது ஏற்பட்ட விபத்தில் காயமடைந்துள்ளனர். தொழிலாளர் நலவாரிய புதிய விதிகளுக்கு எங்கள் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம். என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x