

புதுக்கோட்டையில் ஓய்வு பெற்ற சர்வேயர் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்துகொண் டது நேற்று தெரியவந்தது.
புதுக்கோட்டை காமராஜ புரம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன்(65). ஓய்வு பெற்ற சர்வேயர். இவரது மனைவி சாந்தகுமாரி(60). இவர்களது மகன் ராதாகிருஷ்ணன்(25). இவர், தனது வீட்டின் அருகி லேயே செல்போன் சர்வீஸ் செய்யும் தொழில் செய்துள் ளார். மகள் அபிராமி. அக்கு பங்க்சர் பயிற்சி பெற்றவர்.
இந்நிலையில், அபிராமிக் கும், தஞ்சை மாவட்டம் வல்லம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டனுக்கும் கடந்த ஆண்டு ஜூன் 4-ம் தேதி திருமணம் நடைபெற்றது. பின் னர், தம்பதியிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இது தொடர் பாக வல்லம் காவல் நிலை யத்தில் புகார் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இதையடுத்து, கணவர் வீட்டாருடன் கோபித்துக் கொண்டு, தனது பெற்றோர் வீட்டுக்கு வந்துவிட்டார் அபிராமி. மேலும், சாந்த குமாரிக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் கண்ணன் குடும்பத்தினர் மிகுந்த மன வேதனைக் குள்ளாகி இருந்தனர்.
இந்நிலையில், அபிராமி யின் திருமண நாளான ஜூன் 4-ம் தேதி முதல், அவர்களது வீட்டின் கதவு உட்புறம் பூட்டப்பட்டிருந்தது. இதுகுறித்து தகவலறிந்த கணேஷ் நகர் போலீஸார், வீட்டின் கதவை உடைத்து, நேற்று உள்ளே சென்று பார்த் தனர்.
அப்போது, வீட்டுக்குள் கண்ணன், ராதாகிருஷ்ணன், அபிராமி ஆகியோர் தூக்கில் தொங்கிய நிலையிலும், சாந்தகுமாரி விஷமருந்திய நிலையிலும் இறந்துகிடந்தது தெரியவந்தது. மேலும், அங்கு ஒரு கடிதமும் இருந்துள்ளது.
நால்வரது சடலங்களையும் மீட்ட போலீஸார், பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத் துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரே குடும்பத் தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் புதுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.