

சுதந்திரப் போராட்ட தியாகியும், மேடை நாடகக் கலைஞருமான எஸ்.எஸ்.விஸ்வநாத தாஸின் 131-வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
சிவகாசியில் 1886-ம் ஆண்டு ஜூன் 16-ம் தேதி சுப்ரமணியம்-ஞானாம்பாள் தம்பதிக்கு மூத்த மகனாக பிறந்த விஸ்வநாத தாஸ், குரல் வளமும், கலை ஆர்வமும் கொண்டிருந்ததால், மேடை நாடகத்தின்பால் ஈர்க்கப்பட்டார். தேசிய உணர்வால் உந்தப்பட்ட அவர், மகாத்மா காந்தியின் அஹிம்சை கொள்கையில் ஈடுபாடு கொண்டு காங்கிரஸ் பேரியக்கத் தில் இணைந்தார். மேடை நாடகங் கள் வாயிலாக, மக்களிடையே சுதந்திர உணர்வை தீவிரமாக வளர்த்ததால், வீரத் தியாகி என்றும் அவர் அழைக்கப்பட்டார்.
‘கொக்கு பறக்குதடி பாப்பா’ என்பது உள்ளிட்ட அவரது பாடல் கள், காங்கிரஸ் கட்சியின் விடு தலை போராட்டங்களில் பரவ லாக பயன்படுத்தப்பட்டன. ஜாலி யன் வாலாபாக் சம்பவத்தை யடுத்து அவர் எழுதிய, ‘பஞ்சாப் படுகொலை பாரில் கொடியது’ என்ற பாடல் விடுதலை போராட்டத் தில் முக்கிய இடம் பிடித்தது. புராண நாடகங்களின் வாயிலாக விடுதலை அரசியலை புகுத்தியது இவரது சிறப்பம்சம் என்று ஆய் வாளர்களால் பாராட்டப்படுகிறது. விடுதலை போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்றதால் பலமுறை ஆங்கி லேய அரசால் சிறையில் அடைக்கப்பட்டார்.
1940-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி, தனது 54-வது வயதில், முருகன் வேடத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போது மேடை யிலேயே விஸ்வநாத தாஸ் உயிர்நீத்தார்.