வங்கித் தேர்வுக்கு இலவச பயிற்சி

வங்கித் தேர்வுக்கு இலவச பயிற்சி
Updated on
1 min read

இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர் சீஸ் வங்கி, கனரா வங்கி உட்பட அனைத்து பொதுத்துறை வங்கி களுக்கு (பாரத ஸ்டேட் வங்கி தவிர) தேவைப்படும் பணியாளர்களும், அதிகாரிகளும் இன்ஸ்டிடியூட் ஆஃப் பேங்கிங் பெர்சனல் செலக்சன் (ஐபிபிஎஸ்) நிறுவனம் நடத்தும் போட்டித் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர். எழுத்துத் தேர்வு வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது.

ஐபிபிஸ் நடத்தும் வங்கித் தேர் வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர் களுக்கு இலவச பயிற்சி வகுப்பு களை இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் (தமிழ்நாடு) மற்றும் டாக்டர் அம்பேத்கர் கல்வி, வேலை வாய்ப்பு பயிற்சி மையம் இணைந்து நடத்தவுள்ளன.

இது குறித்து பயிற்சி வகுப்பு களின் ஒருங்கிணைப்பாளர் எம்.சண்முகம் கூறுகையில், “ஐபிபிஎஸ் நடத்தும் வங்கித் தேர்வுக்கு விண் ணப்பிக்கும் ஆர்வமுள்ள ஏழை மாணவர்களுக்கு வரும் ஆகஸ்ட் 7-ம் தேதி முதல் இலவசமாக பயிற்சி அளிக்க உள்ளோம். இந்த பயிற்சியானது தேர்வு தேதிக்கு ஒரு வாரம் முன்புவரை, ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ‘நரேஷ்பால் மையம் (2-வது தளம்), 27, வி.வி.கோவில் தெரு, தேனாம்பேட்டை (காமராஜர் அரங்கம் எதிரில்), சென்னை’ என்ற முகவரியில் நடைபெறும். பயிற்சியின்போது தேர்வுக்கு தயாராகும் வழிமுறைகள், மாதிரி தேர்வு உள்ளிட்டவை நடைபெறும். பயிற்சி குறித்த கூடுதல் விவரங் களுக்கு 9894496760, 9840761603 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in