

போக்குவரத்துத் தொழிலாளர் களின் நீண்ட கால கோரிக்கை களை தமிழக அரசு இனியும் காலம் தாழ்த்தாமல் நிறை வேற்ற வேண்டும் என அரசி யல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதுதொடர்பாக நேற்று கட்சித் தலைவர்கள் வெளி யிட்ட அறிக்கைகளில் கூறியிருப்ப தாவது:
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டா லின்:
மக்கள் படும் அவதிகளை நீக்க, இனியும் கவுரவம் பார்க்கா மல் போக்குவரத்துத் தொழி லாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முதல்வர் முன்வர வேண்டும்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர்:
தொழிலாளர் களின் கோரிக்கைகளை உடனடி யாக நிறைவேற்றுவதற்கு போக்கு வரத்துக் கழகங்களுக்கு தமிழக அரசு சிறப்பு நிதி ஒதுக்கி, கோரிக்கைகளுக்கு தீர்வு காண முன்வர வேண்டும்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த்:
நாள் ஒன்றுக்கு ஒரு கோடி ஏழை, எளிய மக்கள் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தை நம்பித் தான் பயணம் செய்கின்றனர். எனவே, தொழிலாளர்களின் நிலு வைத் தொகையை அரசு உடனடி யாக வழங்கி வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ:
போக்குவரத்துத் தொழி லாளர்களின் வேலை நிறுத்தத் தால் பொதுமக்கள், நோயாளிகள், மாணவர்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி உள்ளனர். எனவே, தமிழக முதல்வர் இப்பிரச்சினை யில் உடனடியாக தலையிட்டு, விரைவில் சுமுக தீர்வு காண வேண்டும்.
பாமக நிறுவனர் ராமதாஸ்:
இன்னும் சில நாட்களுக்கு இதேநிலை நீடித்தால் அரசுக்கு எதிரான தங்களின் கொந்தளிப்பை மக்கள் வெளிப்படுத்தக் கூடும். அதற்கு இடம் தராமல் மக்களின் அவதியையும், தொழிலாளர் களின் கோரிக்கைகளில் உள்ள நியாயத்தையும் கருத்தில் கொண்டு வேலைநிறுத்தத் துக்கு அரசு சுமூக தீர்வு காண வேண்டும்.
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்:
போக்குவரத்துத் தொழிலாளர்களின் நலன், பொது மக்களின் நலன் கருதி முதல்வர் நேரடியாக அனைத்து தொழிற்சங்கங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும்.
விடுதலை சிறுத்தைகள் தலை வர் திருமாவளவன்:
வேலை நிறுத்தப் போராட்டம் நாள்கணக் கில் நீடித்தால் பொதுமக்கள் வெகுவாக பாதிக்கப்படும் நிலை உருவாகும்.
நிறைவேற்ற வேண்டும்
எனவே, நாட்களைக் கடத்தாமல் தமிழக அரசு உடனடியாகப் பேச்சு வார்த்தை நடத்தி, தொழிலாளர் களின் ஊதிய உயர்வு உள்ளிட்ட அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும்.
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா:
தமிழக அரசு காலம் தாழ்த் தாமல் போக்குவரத்து தொழிற் சங்கப் பிரதிநிதிகளை அழைத் துப் பேசி அவர்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று இப்பிரச்சினைக்கு சுமூக தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரி வித்துள்ளனர்.