

ஜல்லிகட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தியவர்களை போலீஸார் எந்த வகையிலும் துன்புறுத்தக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் பாவேந்தன், செந்தில்குமார் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஆர்.மகாதேவன் முன் நேற்று மாலை விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர் ஆர்.சங்கரசுப்பு, அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் ஆர்.முத்துக்குமாரசாமி, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன், வழக்கறிஞர் சுதா ரவி ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.
நீதிபதி ஆர்.மகாதேவன் கூறும்போது, அமைதியாக போராட்டம் நடத்தியவர்கள் மீது அத்துமீறி செயல்பட்டது ஏன், தடியடி நடத்தியது ஏன், இந்த தடி யடியால் பொதுமக்கள் அதிகமாக பாதி்க்கப்பட்டுள்ளனர். சென்னை மாநகரமே போக்குவரத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து அரசு விளக் கம் அளிக்க வேண்டும் என்றார்.
அப்போது நீதிபதி மனுதாரர் தரப்பு வழக்கறிஞரிடம் ‘‘இந்தப் போராட்டம் எப்போது வரை தொட ரும் என்பது குறித்தும், போலீஸார் அத்துமீறி நடந்து கொண்டது குறித்தும் போராட்டத்தில் ஈடுபட் டவர்கள் தரப்பில் கேட்டு நாளை (இன்று) தெரிவிக்க வேண்டும்’’ என்றார்.
அதன்பிறகு நீதிபதி அரசு தலைமை வழக்கறிஞரிடம், ‘‘முதலில் பொதுமக்களுக்கான பாதுகாப்பை டிஜிபி உறுதி செய்ய வேண்டும். அமைதியான முறையி்ல் போராட்டம் நடத்துபவர் களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். போராட்டத்தை சீர்கு லைக்கும் விதமாக சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது போலீஸார் கடுமையான நடவ டிக்கை எடுக்க வேண்டும். போராட் டத்தில் ஈடுபட்டவர்கள் மீது ஒரு வேளை பொய்வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருப்பதாக தெரிய வந்தால் அதை நானே ரத்து செய்வேன்’’ எனக்கூறி விசார ணையை இன்று தள்ளி வைத்தார்.
இதற்கிடையில், வழக்கறிஞர் சுதா ரவி தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வில் மீண்டும் முறையிட்டார். இது தொடர்பான வழக்குகளை தனி நீதிபதி விசாரித்து வருவதால், பொறுத்திருந்து பார்ப்போம்’’ என்றார்.