

காரைக்கால் அம்மையார் கோயில் மாங்கனித் திருவிழா நேற்று விமரிசையாக நடைபெற்றது.
63 நாயன்மார்களில் ஒரு வரான புனிதவதி (எ) காரைக் கால் அம்மையாரை, இறைவனே ‘அம்மையே’ என்று அழைத்த தாக ஐதீகம். இவரது கணவர் கொடுத்து அனுப்பிய மாம்பழத்தை அடியாராக வந்த சிவனுக்கு அளித்த காரைக்கால் அம்மையார், பின்னர் கணவர் வந்து மாம்பழம் கேட்டபோது, இறைவனை வேண்டியுள்ளார். அப்போது, சிவனே மாம்பழத்தைக் கொடுத்துள்ளார். இதனால் பயந்த கணவர், இவரை விட்டுப் பிரிந்தார். பின்னர், எலும்பு உருவத்தில் கைலாயம் சென்றார் காரைக்கால் அம்மையார் என்று பக்தர்களால் நம்பப்படுகிறது.
இவரது வாழ்வை சித்தரிக்கும் வகையில், காரைக்காலில் ஆண்டுதோறும் மாங்கனித் திருவிழா நடைபெறும். கடந்த 17-ம் தேதி திருவிழா தொடங்கியது. நேற்று முன்தினம் புனிதவதி - பரமதத்தன் திருக்கல்யாணம், வெள்ளைச்சாத்து புறப்பாடு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மற்றும் அமைச்சர் கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து, புனிதவதி - பரமதத்தன் வீதியுலா நடைபெற்றது.
முக்கிய நிகழ்வான, அடியார் கோலத்தில் சிவபெருமான், பவளக்கால் விமானத்தில் வீதி யுலா வரும் நிகழ்ச்சி நேற்று நடை பெற்றது. அப்போது, வீதியின் இரு புறமும் கூடியிருந்த ஆயிரக் கணக்கான மக்கள், சிவபெருமான் மீது மாம்பழங்களை இறைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.