Published : 04 Feb 2017 10:21 AM
Last Updated : 04 Feb 2017 10:21 AM

தலித் சிறுமி கொலை சம்பவம்: குண்டர் தடுப்பு சட்டத்தில் இளைஞர் மீது நடவடிக்கை

தலித் சிறுமி நந்தினி கொலை வழக்கில் கைதான மணிகண்டன், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நேற்று கைது செய்யப்பட்டார்.

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே சிறுகடம்பூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகள் நந்தினி(17), கடந்த ஜனவரி 14-ம் தேதி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டு, கிணற்றில் சடலமாகக் கிடந்தார். இதுகுறித்து இரும்புலிக்குறிச்சி போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு கீழமாளிகையைச் சேர்ந்த ராமசாமி மகன் மணிகண்டன்(26), அவரது நண்பர் மணிவண்ணன் உள்ளிட்ட 4 பேரை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், இந்து முன்னணி மாவட்டத் தலைவர் ராஜசேகரை கைது செய்யக் கோரி, நந்தினியின் உறவினர்கள் கடந்த ஜன.15-ம் தேதி அரியலூரில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இவ்வழக்கை சிபிஐ விசாரிக்கக் கோரி மாதர் சங்கத் தினர் அரியலூரில் ஜன.28-ம் தேதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், தேசிய ஆதி திராவிடர் நல ஆணைய அதிகாரி கள் இனியன், லிஸ்டர் ஆகியோர் தீவிர விசாரணை நடத்திவிட்டுச் சென்றனர்.

ஜி.ராமகிருஷ்ணன் கோரிக்கை

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலத் தலைவர் ஜி.ராம கிருஷ்ணன் நேற்று நந்தினியின் இல்லத்துக்குச் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி னார். பின்னர் அவர் செய்தி யாளர்களிடம் கூறியபோது, “நந் தினி கொலை வழக்கை சிபிசிஐடி விசாரிக்குமாறு உத்தரவிட வேண் டும். இச்சம்பவத்தின் பின்னணியில் உள்ள இந்து முன்னணி மாவட்டத் தலைவர் ராஜசேகரை கைது செய்ய வேண்டும். முதல் தகவல் அறிக் கையில் கூட்டு பலாத்காரம் என்ற பிரிவையும் சேர்க்க வேண் டும். நந்தினி குடும்பத்துக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்” என்றார்.

இந்நிலையில், இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட மணிகண்டனை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய அரியலூர் ஆட்சி யர் எ.சரவணவேல்ராஜ் நேற்று உத்தரவிட்டார். அந்த உத்தரவின் நகலை திருச்சி மத்திய சிறை அதிகாரிகளிடம் அரியலூர் மாவட்ட போலீஸார் வழங்கினர். மணிகண்டன் இந்து முன்னணி ஒன்றியச் செயலாளராக செயல்பட்ட வர் என்றும் கடந்த டிச.29-ம் தேதி அந்த அமைப்பில் இருந்து நீக்கப் பட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x