

நாங்கள் தொடங்கவுள்ள கட்சியின் தலைமையில் புதிய கூட்டணி அமையும் என்று மத்திய முன்னாள் அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
தஞ்சை மாவட்டம் கும்ப கோணத்தில் நேற்று நடைபெற்ற, சிறு பான்மையினர் பிரிவு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற ஜி.கே.வாசன், பின்னர் செய்தியாளர்களி டம் கூறியது:
வரும் சட்டப்பேரவைத் தேர்த லின்போது, தமிழகத்தில் எங்கள் தலைமையில் புதிய கூட்டணி அமைய வாய்ப்புள்ளது. மதச் சார்பற்ற கொள்கை கொண்ட எங்கள் புதிய கட்சி சிறுபான்மை யினருக்கு ஆதரவாக இருக்கும்.
விவசாயிகள் உரத் தட்டுப்பாட் டால் பெரிதும் அவதிக்குள்ளாகி யுள்ளனர். எனவே, யூரியா உரம் தட்டுப்பாடின்றிக் கிடைக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பால் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு உள்ளிட்ட மக்கள் பிரச்சனைகளுக்காக நாங்கள் தொடர்ந்து போராடுவோம்.
புதிதாக நாங்கள் தொடங்கும் கட்சி, ஊழலற்ற, நேர்மையான ஆட்சியைத் தரும். எங்களின் ஒவ்வொரு நிமிடத்தையும் கட்சி முன்னேற்றத்துக்காகவும், வளர்ச்சிக்காகவும் பயன்படுத்து வோம். தேவையற்றவர்களின் பேச்சுகளுக்கு பதிலளித்து எங்கள் நேரத்தை வீணடிக்கமாட்டோம் என்றார்.