Published : 26 Feb 2014 12:00 AM
Last Updated : 26 Feb 2014 12:00 AM

தமிழகத்துக்கு துரோகம் இழைத்த காங்கிரஸ், திமுக: தேர்தல் அறிக்கையில் அதிமுக குற்றச்சாட்டு

அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணை 19.2.2013-ல் மத்திய அரசிதழில் வெளியிடப்பட்ட பிறகும், அதில் குறிப் பிட்டுள்ளபடி காவிரி வேலாண்மை வாரியத்தை அமைக்க நடவடிக்கை எடுக்காமல் கர்நாடகத்துக்கு சாதகமாக மத்திய அரசு நடந்து கொண்டது. மேலும் 2007-ம் ஆண்டு வழங்கப்பட்ட காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையை மத்திய அரசிதழில் வெளியிடாமல் திட்டமிட்டே காலம் தாழ்த்தியது.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் மூலம் ரூ.2 லட்சம் கோடியை கொள்ளை அடித்தது, கச்சத்தீவை மீட்பதற்காக உச்ச நீதிமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா தொடுத்த வழக்கில் தமிழகத்துக்கு எதிராக மனு தாக்கல் செய்தது, மாநில அரசின் அதிகாரங்களைப் பறிக்கும் வகையில் வகுப்புவாரி வன்முறை தடுப்புச் சட்டத்தை நிறைவேற்ற முயல்வது, மாநிலத்தின் நிதி ஆதாரங்களைக் குறைக்கும் வகையிலான பொருட்கள் மற்றும் சேவை வரியை அறிமுகப்படுத்த முனைவது.

தவறான பொருளாதாரக் கொள்கை களை கடைபிடித்து விலைவாசி உயர வழிவகுத்தது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போன்றவற்றின் விலைகளை பலமுறை உயர்த்தியது. மருத்துவப் படிப்பில் பொது நுழைவுத் தேர்வை நுழைக்க நடவடிக்கை எடுக்க முயல்வது. தமிழகத்துக்குத் தேவை யான மின்சாரத்தை மத்திய மின் தொகுப்பில் இருந்து வழங்க மறுப்பது. தமிழகத்துக்குரிய மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டை குறைத்துக் கொண்டே வருவது. மின்மிகை மாநிலமாக இருந்த தமிழகத்தை மின்குறை மாநிலமாக மாற்றி தமிழகத்தை இருளில் மூழ்கச் செய்தது. இலங்கை இனப்போரை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்காமல், அங் குள்ள தமிழர்களை கொத்து கொத்தாக இலங்கை ராணுவம் கொன்று குவிக்க உறுதுணையாக இருந்தது உள்ளிட்ட துரோகங்களை மத்திய காங்கிரஸ் அரசு செய்துள்ளது.

சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு என்ற மக்கள் விரோத கொள்கைக்கு ஆதரவு அளித்தது. இலங்கைத் ராணுவத்துக்கு பயிற்சியும், ஆயுதங்களும் வழங்கியபோது தட்டிக் கேட்காமல் மவுனம் சாதித்ததுபோன்ற துரோகங்களை திமுக இழைத்துள்ளது.

இவ்வாறு அதிமுக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x