தேர்தல் விதிகளை மீறினால் 2 ஆண்டு சிறை: ஆர்.கே.நகரில் பிரச்சாரம் நாளை ஓய்கிறது - கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிடத் தடை

தேர்தல் விதிகளை மீறினால் 2 ஆண்டு சிறை: ஆர்.கே.நகரில் பிரச்சாரம் நாளை ஓய்கிறது - கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிடத் தடை
Updated on
2 min read

வாக்காளர் அல்லாதோர் வெளியேற தேர்தல் ஆணையம் உத்தரவு

இடைத்தேர்தல் நடக்கும் ஆர்.கே.நகர் தொகுதியில் நாளை மாலை 5 மணியுடன் பிரச்சாரம் ஓய்கிறது. அதற்குள் வாக்காளர் அல்லாத வெளிநபர்கள், தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் விதிகளை மீறினால் 2 ஆண்டு சிறை தண்டனை கிடைக்கும் எனவும் எச்சரித்துள்ளது.

முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைந்ததால், காலியாக இருக்கும் ஆர்.கே.நகர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு வரும் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல், கடந்த மார்ச் 16-ம் தேதி தொடங்கி 23-ம் தேதி முடிவடைந்தது. 27-ம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. டிடிவி தினகரன் (அதிமுக அம்மா), மதுசூதனன் (அதிமுக புரட்சித்தலைவி அம்மா), மருதுகணேஷ் (திமுக), கங்கை அமரன் (பாஜக), மதிவாணன் (தேமுதிக), ஜெ.தீபா (எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை), கலைக்கோட்டுதயம் (நாம் தமிழர்), லோகநாதன் (மார்க்சிஸ்ட்) உட்பட மொத்தம் 62 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

தொகுதியில் கடந்த 2 வாரங் களுக்கும் மேலாக வேட்பாளர் களும் கட்சித் தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள னர். நாளை (10-ம் தேதி) மாலை 5 மணியுடன் பிரச்சாரம் நிறைவடை கிறது. இதனால், இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் வேட்பாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். தேர்தல் பாதுகாப்புப் பணியில் துணை ராணுவத்தினர் அதிக அளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பிரச்சாரம் நிறைவடைவதால் தொகுதியில் தங்கியிருக்கும் வெளி நபர்கள், நாளை மாலை 5 மணிக்குள் ஆர்.கே.நகரை விட்டு வெளியேற வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஆர்.கே.நகர் சட்டப்பேரவை தொகுதிக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 12-ம் தேதி காலை 7 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். ஏப்ரல் 10-ம் தேதி (நாளை) மாலை 5 மணி முதல் வாக்குப்பதிவு முடியும் வரை மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப் பிரிவு 126-ன் கீழ் விதிகளை அனைவரும் பின்பற்ற வேண்டும்.

10-ம் தேதி மாலை 5 மணிக் குப் பிறகு தேர்தல் தொடர்பான பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் நடத்தவோ, அதில் பங்கேற்கவோ கூடாது. திரைப்படம், தொலைக் காட்சி, எஃப்.எம். ரேடியோ, வாட்ஸ்அப், முகநூல், ட்விட்டர், குறுஞ்செய்தி, இணையம் உள்ளிட்ட அனைத்து மின்னணு வடிவிலான தகவல் தொடர்புகள் வழியாகவும் தேர்தல் பிரச்சாரம் செய்யக் கூடாது.

பொதுமக்களை ஈர்க்கும் வகை யில் இசை நிகழ்ச்சி, திரையரங்க செயல்பாடு, பிற கேளிக்கை, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் வடிவிலும் தேர்தல் பிரச்சாரம் செய்யக்கூடாது. இதை மீறுவோ ருக்கு 1951-ம் ஆண்டு மக்கள் பிரதி நிதித்துவ சட்டப்பிரிவு 126(2)-ன்படி 2 ஆண்டு சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக வழங்கப் படும்.

தொகுதிக்கு வெளியில் இருந்து அழைத்து வரப்பட்ட அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள், கட்சிப் பணியாளர்கள், அதாவது ஆர்.கே.நகர் தொகுதியின் வாக்காளர் அல்லாதோர் அனைவரும் 10-ம் தேதி மாலை 5 மணிக்குள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும். திருமண மண்டபங்கள், சமுதாயக் கூடங்கள், தங்கும் விடுதிகள், விருந்தினர் இல்லங் களில் வெளியூர் நபர்கள் தங்கியுள் ளனரா என்பது கண்டறியப்படும். வேட்பாளர்கள், நட்சத்திர பேச்சா ளர்களுக்கு வழங்கப்பட்ட வாகன அனுமதியும் நாளை மாலை 5 மணிக்குள் முடிந்துவிடும்.

வாக்குப்பதிவு நாளில் வேட் பாளரின் பயன்பாட்டுக்கு ஒரு வாகனம், தேர்தல் முகவருக்கு ஒரு வாகனம், கட்சிப் பணியாளர் களுக்கு ஒரு வாகனம் மட்டுமே அனுமதிக்கப்படும். வாக்காளர்களை வாக்குச்சாவ டிக்கு அழைத்து வரவும், திரும்ப அழைத்துச் செல்லவும் வாகனங் களை வாடகைக்கு எடுக்கவும் வேட்பாளர்களுக்கு அனுமதி இல்லை. இது மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 133-வது பிரிவின்படி தண்டிக் கப்பட வேண்டிய முறைகேடான செயலாகும்.

ஏப்ரல் 10-ம் தேதி மாலை 5 மணி முதல் வாக்குப்பதிவு முடியும் ஏப்ரல் 12-ம் தேதி மாலை 5 மணி வரை கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிடத் தடை விதிக்கப்படுகிறது. ஏப்ரல் 12-ம் தேதி மாலை 6.30 மணி வரை வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிட ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டுள் ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in