சென்னையில் இருந்து திருச்சிக்கு சிறப்பு கட்டண ரயில்கள்

சென்னையில் இருந்து திருச்சிக்கு சிறப்பு கட்டண ரயில்கள்
Updated on
1 min read

சென்னை எழும்பூரில் இருந்து திருச்சிராப் பள்ளிக்கு வரும் 28-ம் தேதி சிறப்பு கட்டண ரயில் இயக்கப்பட உள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருச்சிராப்பள்ளியில் இருந்து இன்று (25-ம் தேதி) இரவு 10.40 மணிக்கு புறப்படும் சிறப்பு கட்டண சிறப்பு ரயில் (06004) மறுநாள் அதிகாலை 5.20 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை வந்தடையும். விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், மாம்பலம் ஆகிய இடங்களில் நின்று செல்லும். இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு தொடங்கி உள்ளது.

இதேபோல், சென்னை எழும்பூரில் இருந்து வரும் 28-ம் தேதி இரவு 10.45 மணிக்கு புறப்படும் சிறப்பு கட்டண ரயில் (06003) மறுநாள் அதிகாலை 5.45 மணிக்கு திருச்சிராப்பள்ளியை சென்றடையும். தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம் ஆகிய இடங்களில் நின்று செல்லும். இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு இன்று (25-ம் தேதி) தொடங்குகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in